பியாஜியோ இந்தியா குழுமத்தின் வெஸ்பா ஸ்கூட்டரின் முந்தைய வெஸ்பா SXL 150 மற்றும் வெஸ்பா VXL 150-க்கு மாற்றாக பிஎஸ்6 வெஸ்பா SXL 149, வெஸ்பா VXL 149 ஸ்கூட்டர்கள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இரண்டு ஸ்கூட்டர்களும் ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து தற்போது அதிகாரப்பூர்வ விற்பனையை வெஸ்பா நிறுவனம் தனது இணையதளத்தின் மூலம் வெளியிட்டு உறுதிப்படுத்தியுள்ளது.
ரெட்ரோ ஸ்டைல் மாடலான இந்த இரு ஸ்கூட்டர்களிலும் 149 சிசி ஒற்றை சிலிண்டர், 3 வால்வு இன்ஜின் FI மூலம் இயக்கப்பட்டு அதிகபட்சமாக 10.32 பிஹெச்பி பவர், 10.6 என்எம் பீக் டார்க் வழங்குகின்றது.
இரண்டு மாடல்களிலும் முன்புறத்தில் ஒற்றை பக்கவாட்டு சஸ்பென்ஷன் மற்றும் பின்புறத்தில் ஹைட்ராலிக் ஷாக் அப்சார்பரை கொண்டுள்ளது. இரண்டு ஸ்கூட்டர்களிலும் முன் சக்கரத்தில் 200 மிமீ மற்றும் பின்புற சக்கரத்தில் 140 மிமீ டிஸ்க் பிரேக்குகள் பொருத்தப்பட்டுள்ளன.
வி.எக்ஸ்.எல் 149 ஸ்கூட்டரில் மேட் பிளாக், மஞ்சள், வைப்ராண்ட் ரெட், அஸுரோ புரோவென்சா, வைப்ராண்ட் பிங்க், வெள்ளை மற்றும் மேஜ் கிரே என மொத்தமாக 7 நிறங்களில் கிடைக்கும்.
வெஸ்பா எஸ்.எக்ஸ்.எல் 149, மேட் பிளாக், மேட் ரெட் டிராகன், ஆரஞ்சு, மேட் நீலம் மற்றும் வெள்ளை ஆகிய நிறத்தில் கிடைக்கிறது.
வெஸ்பா SXL 149 விலை ரூ.1,26 லட்சம்
வெஸ்பா VXL 149 விலை ரூ.1.22 லட்சம்
(எக்ஸ்-ஷோரும், டெல்லி)