இந்திய சொகுசு கார் சந்தை நாளுக்குநாள் விரிவடைந்து வருவதனை உறுதி செய்யும் வகையில் மெர்சிடீஸ் பென்ஸ் இந்திய பிரிவு 2014ஆம் ஆண்டை விட 2015யில் 32 % கூடுதல் விற்பனையை பதிவு செய்துள்ளது.
மெர்சிடீஸ் பென்ஸ் ஏ கிளாஸ்கடந்த 2015 ஆம் ஆண்டில் 13,502 கார்களை விற்பனை செய்துள்ளது. கடந்த 2014யில் 10,201 கார்களை விற்பனை செய்திருந்தது. இவை ஒப்பீட்டால் 2014விட 32 சதவீத கூடுதல் விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.
கடந்த ஆண்டில் வெற்றிகரமாக 15 புதிய மாடல்களை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்திருந்தது. அதிகம் விற்பனை ஆகிவந்த E கிளாஸ் காரை பின்னுக்கு தள்ளிவிட்டு C கிளாஸ் கார் 90 % வளர்ச்சி அடைந்துள்ளது. மேலும் எஸ்யூவி கார்களின் விற்பனை 100 சதவீதமும், பெர்ஃபாமென்ஸ் ரக AMG மாடல்கள் 54 சதவீதமும் , செடான் கார்கள் 42 சதவீதமும் , ஹேட்ச்பேக் கார்களான ஏ கிளாஸ் , பி கிளாஸ் கார்கள் இரட்டை இலக்க வளர்ச்சி சதவீதத்தை அடைந்துள்ளது.
இதுகுறித்து மெர்சிடீஸ் பென்ஸ் இந்திய பிரிவு சிஇஓ கூறுகையில் 2015 ஆம் ஆண்டு மிகவும் வெற்றிகரமான ஆண்டாக பென்ஸ் நிறுவனத்துக்கு அமைந்துள்ளது. இதே வெற்றியை 2016ஆம் ஆண்டிலும் தொடரும் என நம்புவதாக தெரிவித்தார். மேலும் அவர் கூறுகையில் முக்கிய சந்தைகளான சென்னை மற்றும் டெல்லி பாதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கனமழையால் விற்பனை குறைந்துள்ளது. மேலும் டெல்லியில் 2000சிசி மற்றும் அதற்கு மேற்பட்ட டீசல் வாகனங்கள் பதிவுசெய்ய இடைக்கால தடை செய்யப்பட்டுள்ளதால் பாதிப்படைந்துள்ளது.
வரும் காலத்தில் சக்கன் ஆலையில் கூடுதலாக ஒரு உற்பத்தி பிரிவு அதிகரிக்கவும் ஆண்டிற்கு 20,000 வாகனங்களை உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் GLA எஸ்யூவி , CLA மற்றும் மெர்சிடிஸ் மேபக் S500 கார்களை இந்தியாவிலே உற்பத்தி செய்ய திட்டமிட்டுள்ளது. கூடுதலாக 1000 கோடிவரை முதலீடு செய்ய மெர்சிடீஸ் திட்டமிட்டுள்ளது.
2016 ஆம் ஆண்டில் 12 கார்கள் மற்றும் 10 புதிய விற்பனையகம் இரண்டாம் மற்றும் மூன்றாம் தர நகரங்களில் அமைக்க உள்ளது.
தொடர்புடையவை : மெர்சிடிஸ் பென்ஸ் GLE 450 AMG கூபே ஜனவரி 12 முதல்