பட்-இ என்ற பெயரில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் எலக்ட்ரிக் Budd – e வேனை CES 2016 கண்காட்சியில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஃபோக்ஸ்வேகன் மைக்ரோ பஸ் எலக்ட்ரிக் வாகனமாகும்.
ஃபோக்ஸ்வேகன் Budd-eஃபோக்ஸ்வேகன் மைக்ரோபஸ் வெற்றியை அடிப்படையாக கொண்ட பட் இ புதிய MEB (Modularen Elektrisch Baukasten – modular electric drive kit) பிளாட்ஃபாரத்தில் உருவாக்கப்பட்டுள்ள முதல் மைக்ரோ பஸ் பட் இ ஆகும். எதிர்கால எலக்ட்ரிக் வாகனங்களுக்காக உருவாக்கப்பட்டுள்ள எம்இபி தளத்தில் உருவாக்கப்படும் மற்ற கார்கள் போர்ஷே இ மிஷன் மற்றும் ஆடி இ ட்ரான் குவாட்ரோ போன்றவையாகும்.
பட் இ வேன் முகப்பு தோற்றம் மிகவும் ஸ்டைலிங்காக அகலமான க்ரோம் பட்டை கோடுகள் முகப்பு விளக்குகளுடன் இணைந்து ஹெட்லைட் தொடர்ச்சியாக கருப்பு நிறத்தினை பெற்ற நேர்த்தியான தோற்றத்தினை பெற்றுள்ளது. பட்டைகளுக்கு மத்தியில் ஃபோக்ஸ்வேகன் இலச்சினை அமையபெற்றுள்ளது. முகப்பில் உள்ள C வடிவ எல்இடி விளக்குகள் பிரமாதமாக உள்ளன. மேற்கூறையில் சோலார் பேனல்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
ஃபோக்ஸ்வேகன் Budd-e4 இருக்கைகளை கொண்ட இந்த மாடலில் கதவுகள் அனைத்தும் தானியங்கி முறையில் சைகைக்கு ஏற்ப திறக்கும் திறன் கொண்டதாகும். பின்புறத்தில் ஸ்லைடிங் டோர் கதவுகள் உள்ளன. எதிர்கால தேவையை ஈடுகட்டும் வகையில் பல நவீன் சிறப்பம்சங்களை பெற்றிருக்கும்.
மிக சவுகரியமான இருக்கைகளுடன் நேர்த்தியாக அமைந்துள்ள உட்புறத்தில் பெரிய ஹெசுடி திரையுடன் கூடிய இணைய வசதிகள் , டிஜிட்டல் இன்ஸ்டூருமென்ட் கிளஸ்ட்டர் போன்றவற்றை பெற்றிருக்கும்.
முன் ஆக்சில் மற்றும் பின் ஆக்சிலிலும் தனியான ஒவ்வொரு மோட்டார்கள் என மொத்தம் இரண்டு மின்சார மோட்டார்கள் பொருத்தப்பட்டிருக்கும். இதில் முன்பக்க மோட்டார் வெளிப்படுத்தும் ஆற்றல் 134bhp ஆற்றல் மற்றும் 200Nm டார்க் வெளிப்படுத்தும். பின்புறத்தில் உள்ள மோட்டார் 168bhp ஆற்றல் மற்றும் 290 Nm டார்க் வெளிப்படுத்தும். இரு மோட்டார்களும் இணைந்து 302BHP ஆற்றல் மற்றும் டார்க் 490Nm வெளிப்படுத்தும்.
ஒருமுறை Budd-e வேனை சார்ஜ் செய்தால் 500 கிமீ வரை பயணிக்க முடியும் 80 % சார்ஜ் ஏற வெறும் 30 நிமிடங்கள் எடுத்துக்கொள்ளும். இதில் லித்தியம் ஐயன் பேட்டரி பொருத்தப்பட்டிருக்கும்.
ஃபோக்ஸ்வேகன் Budd-e படங்கள்
[envira-gallery id=”5227″]