வரும் ஜனவரி 20ந் தேதி டிவிஎஸ் அப்பாச்சி 200 பைக் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. முழுதான உற்பத்தி நிலை சோதனை ஓட்ட படங்களை நமது தளத்தில் வெளியாகியிருந்தது.
அப்பாச்சி ஆர்டிஆர் 200 பைக்கில் 27 Bhp ஆற்றலை வழங்கும் 200சிசி ஆயில் கூல்டு என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் டார்க் 29என்எம் ஆகும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் இடம் பெற்றிருக்கலாம்.
டிஜிட்டர் இன்ஸ்டூருமென்ட் கன்சோலை கொண்டுள்ள அப்பாச்சி RTR 200 பைக்கில் ரேஸ் ஆன் என்ற எழுத்துக்கள் உள்ளது. மேலும் டிவிஎஸ் டயர்கள் இந்திய சந்தைக்கு பொருத்தப்பட்டுள்ளதாக தெரிகின்றது. ஏபிஎஸ் மற்றும் ஏபிஎஸ் இல்லாத மாடல் என இரு விதமான வேரியண்டில் விற்பனைக்கு வருகின்றது.
ரூ.1.25 லட்சத்திலான விலையில் டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 200 பைக் வரலாம். டார்கன் கான்செப்ட் அடிப்படையில் உருவாக்கப்பட்டிருக்கும் அப்பாச்சி 200 பைக்கில் பின்புறமும் டிஸ்க் பிரேக் இருக்கும். கேடிஎம் டியூக்200 , பல்சர் 200 ஏஎஸ் போன்ற மாடல்களுடன் அப்பாச்சி ஆர்டிஆர் 200 போட்டியை சந்திக்கும்.