கொரோனா வைரஸ் பரவலால் விற்பனை செய்யப்பட்ட பயணிகள் வாகனங்களில் டாப் 25 இடங்களை கைப்பற்றிய மாடல்களை பற்றி அறிந்து கொள்ளலாம். நாடு முழுவதும் உள்ள லாக் டவுன் செய்யப்பட்டுள்ளதால் அதிகபட்சமாக 95 சதவீத விற்பனை வீழ்ச்சியை ஃபோக்ஸ்வாகன் நிறுவனம் பதிவு செய்துள்ளது. அதாவது வெறும் 131 கார்களை மட்டும் விற்பனை செய்துள்ளது.
நாட்டின் மற்றொரு மிகப்பெரிய யுட்டிலிட்டி வாகன தயாரிப்பாளரான மஹிந்திரா நிறுவனம், 88 சதவீத விற்பனை வீழ்ச்சி பதிவு செய்துள்ளது. கடந்த மார்ச் 2019-ல் 25,982 ஆக பதிவு செய்துள்ள நிலையில், இந்த ஆண்டு 3,171 ஆக பதிவு செய்துள்ளது.
முதன்மையான மாருதி சுசுகி விற்பனை 47 சதவீதம் வீழ்ச்சி அடைந்து 76,240 யூனிட்டுகளை மட்டும் விற்பனை செய்திருந்தது. இரண்டாவது மிகப்பெரிய தயாரிப்பாளரான ஹூண்டாய் கார் விற்பனையில் 26,300 எண்ணிக்கையை பதிவு செய்துள்ளது.
நாட்டின் பெருமைமிகு மோட்டார் நிறுவனமான டாடா மோட்டார்ஸ், மார்ச் 2020-ல் 5676 யூனிட்டுகளை மட்டும் விற்பனை செய்து முந்தைய ஆண்டு இதே மாதத்துடன் ஒப்பீடுகையில் 68 % வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
விற்பனையில் டாப் 25 கார்கள் – மார்ச் 2020
வ.எண் | தயாரிப்பாளர்/மாடல் | மார்ச் 2020 |
1. | மாருதி சுசூகி பலேனோ | 11,406 |
2. | மாருதி சுசூகி ஆல்ட்டோ | 10,829 |
3. | மாருதி சுசூகி வேகன் ஆர் | 9151 |
4. | மாருதி சுசூகி ஸ்விஃப்ட் | 8575 |
5. | கியா செல்டோஸ் | 7466 |
6. | ஹூண்டாய் கிரெட்டா | 6706 |
7. | ஹூண்டாய் வெனியூ | 6127 |
8 | மாருதி சுசூகி ஈக்கோ | 5966 |
9. | மாருதி விட்டாரா பிரெஸ்ஸா | 5513 |
10. | மாருதி சுசூகி டிசையர் | 5476 |
11. | மாருதி சுசூகி எஸ்-பிரெஸ்ஸோ | 5159 |
12. | ஹூண்டாய் ஐ10 கிராண்டே | 4293 |
13. | மாருதி சுசுகி செலிரியோ | 4010 |
14. | மாருதி சுசுகி எர்டிகா | 3969 |
15. | டொயோட்டா இன்னோவா | 3810 |
16. | ஹூண்டாய் எலைட் ஐ20 | 3455 |
17. | ஹோண்டா அமேஸ் | 2744 |
18. | டாடா நெக்ஸான் | 2646 |
19. | ஹூண்டாய் ஆரா | 2615 |
20 | மாருதி சுசுகி XL6 | 2221 |
21. | ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் | 2197 |
22. | ஹூண்டாய் சான்ட்ரோ | 2169 |
23. | மஹிந்திரா பொலிரோ | 2080 |
24. | மாருதி சுசுகி இக்னிஸ் | 1901 |
25. | மாருதி சுசுகி சியாஸ் | 1863 |