ரூபாய் 1,07,955 விலையில் விற்பனைக்கு வெளியிடப்பட்டுள்ள பிஎஸ்6 என்ஜினை பெற்ற பஜாஜ் பல்சர் 180F பைக்கின் முந்தைய பிஎஸ்4 மாடலை விட ரூ.11,000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.
அரை ஃபேரிங் செய்யப்பட்டதாக விற்பனைக்கு கிடைத்து வருகின்ற பல்சர் 180எஃப் மாடலில் பிஎஸ்6 என்ஜினை தவிர வேறு எந்த மாற்றங்களும் இல்லை. முன்பாக கார்புரேட்டர் என்ஜின் இடம்பெற்றிருந்த நிலையில் இப்போது இந்த பைக்கில் Fi பெற்று 17 PS பவர் வெளிப்படுத்துகின்ற 178 சிசி என்ஜின் டார்க் 14.2 NM ஆகும். இதில் 5 வேக கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.
முன்புறத்தில் 280 மிமீ டிஸ்க் மற்றும் பின்புறத்தில் 230 மிமீ டிஸ்க் பிரேக் உடன் சிங்கிள் சேனல் ஏபிஎஸ் பிரேக் நிரந்தர அம்சமாக இணைக்கப்பட்டிருக்கின்றது. முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் டூயல் ஷாக் அப்சார்பர் பெற்றுள்ளது.
இந்தியாவில் விற்பனையில் உள்ள ரூ. 1,03,750 கிடைக்கின்ற டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 180 பைக்கிற்கு நேரடியான போட்டியாக விளங்குகின்ற பஜாஜ் பல்சர் 180F பைக்கின் விலை ரூ. 1,07,955 ஆகும்.