ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில் பிஎஸ்-4 வாகனங்ளை விற்பனை செய்ய ஏப்ரல் 14 ஆம் தேதிக்குப் பிறகு அல்லது லாக் டவுன் நீக்கப்பட்ட பிறகு 10 நாட்கள் வரை விற்பனை செய்ய அனுமதி வழங்கி உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மார்ச் 31 ஆம் தேதி வரை மட்டும் பிஎஸ்-4 வாகனங்கள் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்ட நிலையில், தற்போது நாட்டில் கோவிட்-19 வைரஸ் தாக்குதலின் காரணமாக கடந்த மார்ச் 20 ஆம் தேதி முதல் பெரும்பாலான முன்னணி மெட்ரோ நகரங்களில் உள்ள டீலர்கள் மூடப்பட்டுள்ள நிலையில், மார்ச் 22 முதல் ஏப்ரல் 14 ஆம் தேதி வரை, 20,000 க்கு மேற்பட்ட டீலர்கள் மூடப்பட்டுள்ளது.
பிஎஸ் 4 வாகனங்களை விற்பனை செய்வதற்கான மார்ச் 31 காலக்கெடுவை நீட்டிக்க ஆட்டோமொபைல் டீலர்கள் சம்மேளனம் (FADA) மற்றும் ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் சங்கம் (சியாம்) ஆகியவை உச்ச நீதிமன்றத்தை நாடியிருந்தன. இன்றைக்கு நடைபெற்ற விசாரனையில் ஏப்ரல் 14 ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு நீக்கப்பட்ட பிறகு அல்லது லாக் டவுன் நீக்கப்படும் தேதியிலிருந்து 10 நாட்களுக்கு மட்டும் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் டெல்லி மற்றும் தேசிய தலைநகர் பகுதியில் விற்பனை செய்ய அனுமதி வழங்கப்படவில்லை.
நாட்டில் மொத்தமாக ரூ.6,200 கோடி மதிப்பிலான 7 லட்சம் இரு சக்கர வாகனங்கள், 12,000 பயணிகள் வாகனம் மற்றும் 8,000 வர்த்தக வாகனங்கள் என மொத்தமாக விற்பனை செய்யப்படாமல் 7.20 லட்சம் வாகனங்கள் உள்ளது.
எனவே, டீலர்களிடம் மிக அதிகப்படியான சலுகைகளை பிஎஸ்4 வாகனங்களுக்கு வழங்க வாய்ப்புள்ளது.