மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி300 எஸ்யூவி காரில் டீசல் என்ஜின் பெற்ற மாடல் விலையில் எந்த மாற்றுமும் இல்லை. பிஎஸ்4 மாடலின் விலையில் எந்த மாற்றமும் இல்லை பிஎஸ்6 என்ஜின் பெற்ற மாடல் வந்துள்ளது.
விற்பனைக்கு வந்துள்ள புதிய பிஎஸ்6 டீசல் என்ஜின் ரூ.8.69 லட்சம் முதல் ரூ.12.69 லட்சம் வரையில் கிடைக்க உள்ளது. பிஎஸ்6 என்ஜினில் W8 AMT நீக்கப்பட்டுள்ளது. மேலும், முன்பாக விற்பனைக்கு கிடைத்து வந்த பிஎஸ்4 மாடலை விட 2 ஹெச்பி வரை பவர் குறைவாக அமைந்துள்ளது.
தோற்ற அமைப்பு மற்றும் வசதிகளில் எந்த மாற்றங்களும் இல்லை. இப்போது 115 ஹெச்பி பவரை வழங்கும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் அதிகபட்சமாக டார்க் 300 என்எம் வெளிப்படுத்தும். இதில் 6 வேக மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் கிடைக்க உள்ளது.
இந்தியாவில் விற்பனைக்கு கிடைக்கின்ற வென்யூ, ஈக்கோஸ்போர்ட், விட்டாரா பிரெஸ்ஸா, டாடா நெக்ஸான் உள்ளிட்ட எஸ்யூவி கார்களை எதிர்கொள்ளுகின்றது. இது தவிர ஆகஸ்ட் மாதம் விற்பனைக்கு வரவுள்ள சோனெட் எஸ்யூவிக்கும் போட்டியாக உள்ளது.
பிஎஸ்6 எக்ஸ்யூவி 300 டீசல் விலை
W4 ரூ.8.69 லட்சம்
W6 ரூ.9.50 லட்சம்
W6 AMT ரூ.9.99 லட்சம்
W8 ரூ.10.95 லட்சம்
W8 (O) ரூ.12.14 லட்சம்
W8 (O) AMT ரூ.12.69 லட்சம்
(எக்ஸ்ஷோரூம் இந்தியா)