புதிய மெர்சிடிஸ் பென்ஸ் E கிளாஸ் காரின் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது. வெளிவந்த சோதனை ஓட்ட படங்களுக்கு ஈடாக இ கிளாஸ் டீசர் உள்ளது. வரும் ஜனவரி 11 முதல் 24 வரை நடைபெறவுள்ள டெட்ராய்ட் ஆட்டோ ஷோ கண்காட்சியில் பார்வைக்கு வரவுள்ளது.
உலக பிரசத்தி பெற்ற மோட்டார் கண்காட்சிகளில் ஒன்றான டெட்ராய்ட் ஆட்டோ ஷோ கண்காட்சியில் எண்ணற்ற புதிய மாடல்கள் மற்றும் கான்செப்ட்கள் காட்சிக்கு வரவுள்ளன.
முகப்பில் வழக்கமான பாரம்பரிய கிரிலுடன் மிக நேர்த்தியாக அமைந்துள்ள பென்ஸ் இலச்சினை நீளமான பானெட் போன்றவை சிறப்பாக உள்ளது. தோற்றம் மற்றும் உட்புறம் போன்றவை முற்றிலும் மேம்படுத்தப்பட்டிருக்கும்.
அடுத்த சில மாதங்களில் சர்வதேச அளவில் விற்பனைக்கு வரவுள்ள புதிய இ கிளாஸ் கார் நம்முடைய சந்தைக்கு அதனை தொடர்ந்து வரவுள்ளது. எஸ் கிளாஸ் காரின் தாத்பரியங்களை ஈ கிளாஸ் மாடல் தழுவியிருக்கும்.