பிஎஸ்6 மாசு உமிழ்வு விதிகள் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ள நிலையில் ஆயிரங்களில் துவங்கி அதிகபட்சமாக ரூ.31 லட்சம் வரை சலுகைகளை உயர் ரக ஆடம்பர கார் தயாரிப்பாளர்கள் வழங்கி வருகின்றனர்.
பொதுவாக பெரும்பாலான ஆட்டோமொபைல் தயாரிப்பாளர்கள் தங்கள் வசம் இருப்பில் உள்ள பிஎஸ்4 வாகனங்களை விற்பனை செய்வதற்கு மாபெரும் அளவில் சலுகைகள் வழங்குகின்றனர். குறிப்பாக முந்தைய பிஎஸ்4 மாற்றத்தின் போது ஏற்பட்ட மிகப்பெரிய அளவிலான சலுகைகளுக்கு ஈடான சலுகையை வழங்கவில்லை. முன்பாக மூன்று நாட்களுக்கு முன்னதாகவே உச்சநீதி மன்றம் பிஎஸ்3 வாகனங்களை விற்பனை செய்ய அனுமதி அளிக்கவில்லை.
மாருதி சுசுகி நிறுவனம் 6 மாதங்களுக்கு முன்னரே பிஎஸ்6 முறைக்கு தங்களுடைய மாடல்களை மாற்றியிருந்தாலும் ஒரு சில மாடல்களை சமீபத்தில் தான் மாற்றிருக்கின்றது. எனவே, இந்நிறுவனம் மற்ற நிறுவனங்களை விட மிகக் குறைவான இருப்பினை கொண்டுள்ளது.
ஹோண்டா கார் தயாரிப்பாளர் தனது சிஆர்-வி மாடலுக்கு அதிகபட்சமாக 5 லட்சம் ரூபாய் வரை சலுகை வழங்குகின்றது.
மஹிந்திராவின் அல்டூராஸ் காருக்கு 4 லட்சம் ரூபாயும், மற்ற எக்ஸ்யூவி 500, ஸ்கார்ப்பியோ போன்ற மாடல்களுக்கு 1.50 லட்சம் வரையிலும் வழங்குகின்றது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் 2.25 லட்சம் வரையும், ஸ்கோடா கார் நிறுவனம் 2.50 லட்சமும் வழங்குகின்றன. ஒவ்வொரு நிறுவனங்களும் முடிந்தவரை தங்ளுடைய கையிருப்பை மார்ச் 30 ஆம் தேதிக்குள் விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளன.
இரு சக்கர வாகன தயாரிப்பாளர்களும் பெரும்பாலான நிறுவனங்களின் விற்பனை வீழ்ச்சியை அடைந்திருக்கும் நிலையில் முன்னணி தயாரிப்பாளர்கள் பிஎஸ்4 வாகன உற்பத்தியை பிப்ரவரி மாத துவக்கித்திலே நிறுத்தி விட்டனர்.
கடந்த பிஎஸ்4 மாற்றத்தின் போது ஒன்று வாங்கினால் ஒன்று இலவசம் சலுகைகளை இந்த முறை எதிர்பார்க்க இயலாது. ஆனால் ,கூடுதலாக சில சலுகைகளை இந்நிறுவனங்கள் வழங்கி வருகின்றனர். அதே போல தற்போது வழங்கப்படும் சலுகைகளை விட மார்ச் 10 ஆம் தேதிக்குப் பிறகு கூடுதலாக வழங்கலாம். ஆனால் கையிருப்பினை பொறுத்தே சலுகைகள் கிடைக்கும்.