இளைய தலைமுறையினரை கவருகின்ற ஸ்கூட்டர்களில் ஹோண்டா டியோ தொடர்ந்து முன்னிலை பெறும் நிலையில் மேம்பட்ட புதிய டிசைன் மற்றும் பிஎஸ்6 என்ஜின் கொண்டதாக வெளியிடப்பட்டுள்ள டியோவில் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
கடந்த 2002 ஆம் ஆண்டில் இந்தியாவில் வெளியிடப்பட்ட டியோ ஸ்கூட்டர் 33 லட்சத்திற்கும் கூடுதலான எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்டு, இந்தியாவிலிருந்து அதிகம் ஏற்றுமதி செய்யப்படுகின்ற மாடலாக விளங்குகின்றது.
டியோ டிசைன்
பொதுவாக தற்போது விற்பனைக்கு வருகின்ற ஹோண்டா மற்றும் ஹீரோ நிறுவனங்களின் பிஎஸ்6 என்ஜின் பெற்ற சில மாடல்கள் புதுப்பிக்கப்பட்ட சேஸை பெறுகின்றது. அந்த வகையில் டியோவிலும் புதுப்பிக்கப்பட்ட ஆக்டிவா 125 மற்றும் ஆக்டிவா 6ஜி மாடலில் வழங்கப்பட்ட அதே சேஸ் கொடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால் முந்தைய மாடலை விட 22 மிமீ கூடுதலான வீல்பேஸ் பெற்றிருப்பதனால் ஸ்டெபிளிட்டி சிறப்பாக அமைந்திருக்கும்.
110சிசி டியோ முந்தைய மாடலை விட மிக கூர்மையான எட்ஜை பெற்று மிக நேர்த்தியான புதுப்பிக்கப்பட்ட பேனல்களை கொண்டிருப்பதுடன் எல்இடி ஹெட்லைட் டாப் வேரியண்டிலும், கிரேஸியா ஸ்கூட்டரில் இடம்பெற்றிருந்த அதே டெயில் விளக்கினை இந்த மாடலும் பெற்றதாக அமைந்துள்ளது.
மொத்தத்தில் முந்தைய மாடலை விட ஸ்டைலிங் அம்சங்களில் மிகவும் கவனம் செலுத்தி உள்ளது வெளிப்படையாகவே டியோவிற்கு புதிய பாடி கிராபிக்ஸ் ஏற்படுத்தப்பட்டுள்ளது. மற்றபடி வண்ணங்களில் 7 விதமாக கிடைக்கின்றது. டீலக்ஸ் வேரியண்டில் சிவப்பு மெட்டாலிக், மஞ்சள் மெட்டாலிக் மற்றும் கிரே மெட்டாலிக் என மூன்று நிறங்களும், ஸ்டாண்டர்டு வேரியண்டில் கிரே மெட்டாலிக், ப்ளூ, ரெட் மற்றும் ஆரஞ்சு நிறத்தைப் பெறுகின்றது.
டியோ என்ஜின் சிறப்புகள்
ஹோண்டா நிறுவனத்தின் புதிய eSP HET (Enhanced Smart Power) நுட்பத்தின் மூலம் சிறப்பான முறையில் மேம்படுத்தப்பட்ட என்ஜினை பெற்றுள்ளது. இந்த நுட்பத்தின் வாயிலாக PGM-FI, குறைந்த உராய்வு மற்றும் ACG ஸ்டார்டர் என மூன்று அம்சங்களை உள்ளடக்கியதாகும்.
புதுப்பிக்கப்பட்ட ப்ரோகிராம்டு ஃபயூவல் இன்ஜெக்ஷன் (PGM-FI – Programmed Fuel Injection) ஆதரவுடன் கூடிய 109.51 சிசி HET என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. ஃபேன் கூல்டு என்ஜின் அதிகபட்சமாக 7500 ஆர்பிஎம்-ல் 7.79 hp பவர் மற்றும் 5,250 ஆர்பிஎம்-ல் 8.79 NM டார்க் வழங்குகின்றது. முந்தைய மாடலை விட 10 சதவீத கூடுதல் மைலேஜ் வழங்கவல்லதாக மேம்படுத்தப்பட்டுள்ளது. முந்தைய பிஎஸ் 4 மாடலை விட 7.90 hp பவரை மற்றும் 9 என்எம் டார்க் வெளிப்படுத்தியது.
வசதிகள்
இரு விதமான வேரியண்டில் டாப் வேரியண்ட் டீலக்சில் முழு டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் பொருத்தப்பட்டு எரிபொருள் இருப்பினை கொண்டு கணக்கிடும் தூரம், சராசரி எரிபொருள் மைலேஜ் மற்றும் நிகழ்நேர எரிபொருள் மைலேஜ் ஆகியவற்றைக் காட்டுகிறது. இந்த கன்சோலில் பயணம் தொலைவு, கடிகாரம் மற்றும் சர்வீஸ் இன்டிகேட்டர் போன்ற பிற விவரங்களையும் வழங்குகிறது. எல்இடி ஹெட்லைட், என்ஜின் கில் சுவிட்சு, ஈக்கோ இன்டிகேட்டரையும் புதிய டியோவில் இணைக்கப்பட்டுள்ளது.
வேரியண்ட்
இப்போது இந்த ஸ்கூட்டரில் டீலக்ஸ் மற்றும் ஸ்டாண்டர்டு என இரு வேரியண்டுகளில் விற்பனைக்கு கிடைக்க துவங்கியுள்ளது. இந்த மாடலில் டீலக்ஸ் வேரியண்டில் கூடுதலாக எல்இடி ஹெட்லைட், 3 ஸ்டெப் ஈக்கோ இன்டிகேட்டர், முழு டிஜிட்டல் ஸ்பீடோமீட்டர் கன்சோல் வழங்கப்பட்டுள்ளது.
பிஎஸ்6 ஹோண்டா டியோ விலை
டியோ | Model | Ex-Showroom விலை |
---|---|---|
Chennai | DIO STD | Rs.65726 |
DIO DLX | Rs.69076 |