வரும் ஜூன் மாதம் விற்பனைக்கு வெளியிடப்பட உள்ள புத்தம் புதிய 2020 ஹூண்டாய் ஐ20 கார் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் ஜெனிவா மோட்டார் ஷோ அரங்கில் மார்ச் மாதம் முதன்முறையாக பொதுமக்கள் பார்வைக்கு வரவுள்ளது.
முந்தைய மாடலை விட மிக நேர்த்தியான ஸ்டைலிஷான முன்புற பம்பரில் மிக நேரத்தியான Z வடிவிலான எல்இடி ரன்னிங் விளக்கு உடன் ஹெட்லேம்ப் கொண்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட புதிய தேன்கூடு கிரிலில் மேட் பிளாக் நிறத்தினை பெற்று பக்கவாட்டில் புதிய 16 அங்குல டூயல் டோன் அலாய் வீல், ஒருங்கிணைந்த நேர்த்தியான ORVM மற்றும் ஷார்க் ஆண்டெனா ஃபின் பெறுகின்றது.
புதிய மாடலின் ஐ 20 இன்டிரியருக்கு ஸ்டீயரிங், புதுப்பிக்கப்பட்ட தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், ப்ளூலிங்க் இணைக்கப்பட்ட கார் தொழில்நுட்பம் மற்றும் க்ரூஸ் கட்டுப்பாடு, ஏசி கண்ட்ரோல், ஸ்டீயரிங்கில் கண்ட்ரோல் வசதி போன்ற பல அம்சங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம். மழை உணரும் வைப்பர் மற்றும் தானியங்கி ஹெட்லேம்ப் போன்றவை கொண்டிருக்கலாம்.
இந்த மாடலை பொறுத்தவரை, வென்யூ எஸ்யூவி காரில் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல், 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் என மூன்று என்ஜின் ஆப்ஷனை கொண்டுள்ளது. இதில் மேனுவல், ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இடம்பெற உள்ளது.