இந்தியர்கள் மிகவும் ஸ்டைலான வாகனங்கள் மற்றும் சொகுசு வசதிகளை பெரிதும் விரும்ப தொடங்கியுள்ளதாக ஜேடி பவர் சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன. தொடர்ந்து 4 வருடங்களாக ஸ்டைலான வாகனங்களை விரும்புவது அதிகரித்து வருகின்றது.
ஜேடி பவர் நிறுவனம் நடத்திய 2015 இந்திய ஆட்டோமோட்டிவ் பெர்ஃபாமென்ஸ் , எக்ஸ்கியுஸன் மற்றும் லேஅவுட் (2015 India Automotive Performance, Execution and Layout (APEAL) Study ) சர்வே முடிவுகள் வெளியாகியுள்ளது.
தொடர்ந்து 4 ஆண்டுகளிலும் வாகனத்தின் ஸ்டைல் மற்றும் சொகுசு வசதிகள் போன்றவற்றுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருவதாக சர்வே முடிவுகள் தெரிவிக்கின்றன. புதிய கார் வாங்கி 2 முதல் 6 மாதம் வரை உள்ள வாடிக்கையாளர்களிடம் 1000 புள்ளிகளுக்கான கேள்விகள் கேட்கப்படும்.
வாடிக்கையாளர்கள் பெரிதும் விரும்புவது ஸ்டைல் , மற்றவர்களிடம் இருந்து தனித்து தெரிய வேண்டும் , அதிகப்படியான வசதிகள் குறிப்பாக ஆடியோ வீடியோ அம்சங்கள் , நேவிகேஷன் , பார்க்கிங் உதவி மற்றும் ஏபிஎஸ் , ஏர்பேக் போன்ற பாதுகாப்பு அம்சங்கள் போன்றவற்றை பெற்றிருக்க வேண்டும்.
APEAL சர்வே முக்கிய குறிப்புகள்
திருப்தி ; புதிய வாகன உரிமையாளர்களின் ஒட்டுமொத்த திருப்தியில் 89 % பேர் மற்றவர்களுக்கு வாகனத்தை பரிந்துரோப்போம் எனவும் 79 % பேர் திரும்ப இதே பிராண்டில் வாகனம் வாங்க விரும்புவதாக தெரிவித்துள்ளனர்.
கூடுதல் அடிப்படை வசதிகள் ; ஆடியோ , பொழுதுபோக்கு , நேவிகேஷன் மற்றும் பாதுகாப்பு போன்ற அம்சங்களுக்கு மிகுந்த முக்கியத்துவம் தருகின்றனர். பார்க்கிங் உதவி , யுஎஸ்பி தொடர்பு போன்றவற்றை பெரிதும் விரும்புகின்றனர்.
ஹேட்ச்பேக் கார்
தொடக்க நிலையில் ஹூண்டாய் இயான்
காம்பேக்ட் காரில் ஹூண்டாய் 10
உயர் காம்பேக்ட் பிரிவில் டொயோட்டா எட்டியோஸ் லிவா மற்றும் கிராஸ்
பிரிமியம் பிரிவில் ஹூண்டாய் ஐ20 மற்றும் ஏக்டிவ்
இந்த பிரிவில் ஹூண்டாய் நிறுவனத்தின் கை ஓங்கியுள்ளது.
செடான் கார்
தொடக்க நிலையில் எட்டியோஸ்
மிட்சைஸ் நிலையில் வென்ட்டோ
எம்பிவி கார்
டொயோட்டா இன்னோவா
எஸ்யூவி கார்
மஹிந்திரா எக்ஸ்யூவி500 போன்ற கார்கள் முன்னிலை வகிக்கின்றது. முழுமையாக தெரிந்துகொள்ள பட்டியலை பாருங்கள்..