கடந்த நவம்பர் மாத விற்பனையில் பட்டைய கிளப்பிய டாப் 10 பைக்குகள் பற்றி தெரிந்துகொள்ளலாம். ஹீரோ ஸ்பிளெண்டர் பைக்கை தொட முடியாத நிலையில் ஹோண்டா ஆக்டிவா ஸ்கூட்டர் இரண்மிடத்தில் உள்ளது.
கடந்த சில மாதங்களாகவே சரிவும் ஏற்றமும் சந்தித்து வந்த ஹீரோ ஸ்பிளெண்டர் பைக் தற்பொழுது முதலிடத்தினை மிக வலுவாக 2.31.160 பைக்குகளை விற்று கைப்பற்றியுள்ளது. ஆக்டிவா ஸ்கூட்டர் சில மாதங்கள் முதலிடம் வகித்தாலும் போட்டியாளர்களின் கடுமையான நெருக்கடியால் 1,83,824 ஸ்கூட்டர்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது.
ஹீரோ டூயட் மற்றும் மெஸ்ட்ரோ எட்ஜ் ஸ்கூட்டர்களின் விற்பனை சிறப்பாக உள்ளது. மேலும் டிவிஎஸ் ஜூபிட்டர் ஸ்கூட்டர் 51, 768 வண்டிகள் விற்பனை ஆகியுள்ளது. டிவிஎஸ் நிறுவனம் முதல் 10 இடங்களில் 6 மற்றும் 7 வது இடங்களை பெற்றுள்ளது.
8 வது இடத்தினை பல்சர் மற்றும் 10 வது இடத்தினை சிடி 100 பிடித்துள்ளது. ஹோண்டா சிபி ஷைன் 61.626 பைக்குகள் விற்பனை ஆகி 5ஆம் இடத்தினை பிடித்துள்ளது.
மேலும் படிக்க ; விற்பனையில் டாப் 10 கார்கள் நவம்பர் -2015