ஆட்டோ எக்ஸ்போவில் ஜேபிஎம் ஆட்டோ தயாரிப்பாளரின் புதிய ஈக்கோ லைஃப் மின்சார பஸ் e12 மற்றும் e9 என இரு விதமான வேரியண்டில் வெளியிடப்பட்டுள்ளது. 12 மீட்டர் மற்றும் 9 மீட்டர் நீளத்தில் கிடைக்கின்ற மாடல்கள் நவீனத்துவமான எலக்ட்ரிக் நுட்பங்களை கொண்டுள்ளது.
ஈக்கோ லைஃப் பேருந்துகளில் மின்னணு பிரேக்கிங் அமைப்பு மற்றும் புதுமையான மின்சார டிரைவ் அமைப்புடன் வருகிறது. டேஸ்போர்டினை பொறுத்தவரை, மிக சிறப்பான வசதிகளுடன் வடிவமைக்கப்பட்ட தொடுதிரையுடன் பல்வேறு வசதிகளை வழங்குகின்றது. மேலும் ஓட்டுநரின் கவனச்சிதறல்கள் இல்லாமல் வாகனம் ஓட்டுவதில் கவனம் செலுத்த அனுமதிக்கிறது.
கடந்த ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிடப்பட்ட இ12 மாடலின் சிறிய ரக 9 மீட்டர் நீளம் பெற்ற இ9 தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த பஸ் மாடல்கள் அரசாங்கத்தின் மேக் இன் இந்தியா திட்டத்தின் நோக்கமாக கொண்டு உள்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது.
நகரத்தின் பயன்பாட்டிற்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பேருந்துகள் சாலை நெரிசலை பொறுத்து 125 கிமீ – 150 கிமீ வரை வழங்கும் என குறிப்பிட்டுள்ளது.
12 மீட்டர் நீளமுள்ள இக்கோ-லைஃப் மின்சார பஸ், 10 வருட செயல்பாட்டில் 1000 டன்னுக்கு சமமான கார்பன் டை ஆக்சைடு மற்றும் 3,50,000 லிட்டர் டீசலை சேமிக்க முடியும் என்று ஜேபிஎம் ஆட்டோ கூறுகிறது.