சீனாவின் எஸ்ஏஐசி குழுமத்தின் எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்துன் அடுத்த மாடலாக 6 இருக்கை மற்றும் 7 இருக்கை பெற்ற ஹெக்டர் பிளஸ் கார் முந்தைய ஹெக்டர் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது. விற்பனைக்கு நடப்பு ஆண்டின் மத்தியில் எதிர்பார்க்கலாம்.
விற்பனையில் உள்ள ஹெக்டர் எஸ்யூவி காரின் அடிப்படையிலான ஹெக்டர் பிளஸ் காரில் கூடுதலாக மூன்றாவது வரிசை இருக்கை சேர்க்கப்பட்டள்ளது. 6 கேப்டன் இருக்கை அல்லது 7 இருக்கை என இருவிதமான முறையில் விற்பனைக்கு வரவுள்ளது.
ஹெக்டர் காரில் இடம்பெற்றுள்ள அதே என்ஜினை பகிர்ந்து கொள்ள உள்ள இந்த மாடலில் 143 ஹெச்பி பவரை வெளிப்படுத்தும் 1.5 லிட்டர் பெட்ரோல் மாடலில் 6 வேக மேனுவல் மற்றும் 7 வேக ஆட்டோ கியர்பாக்ஸ் உள்ளது. கூடுதலாக வழங்கப்பட்டுள்ள 48 வோல்ட் ஹைபிரிட் சிஸ்டம் பெற்ற மாடல் 12 சதவீத கூடுதல் எரிபொருள் சிக்கனம் மற்றும் குறைவான வேகத்தில் 20Nm இழுவைத்திறன் வழங்குகின்றது.
2.0 லிட்டர் டர்போ டீசல் நான்கு சிலிண்டர் பெற்ற என்ஜின் கொண்ட ஹெக்டர் டீசல் மாடல் 170hp குதிரைத்திறன் மற்றும் 350 Nm இழுவைத்திறன் உடன் 6 வேக மேனுவல் கியர்பாக்ஸ் கொண்டதாக உள்ளது.
ஹெக்டர் எஸ்யுவி பெட்ரோல் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 14.16 கிமீ (மேனுவல்), ஆட்டோமேட்டிக் மாடல் மைலேஜ் ஒரு லிட்டருக்கு 13.96 கிமீ மற்றும் பெட்ரோல் ஹைபிரிட் வேரியன்ட் மைலேஜ் லிட்டருக்கு 15.91 கிமீ ஆகும்.
இரு மாடல்களுக்கு இடையில் தோற்ற அமைப்பில் முகப்பில் முன்புற கிரில் பிளாக் ஃபினிஷ் செய்யப்பட்டு முன்புற பம்பர், எல்இடி ஹெட்லைட் உடன் ரன்னிங் விளக்கில் சிறிய அளவிலான மாற்றங்களை கொண்டுள்ளது. பின்புற பம்பர் டெயில் கேட் மற்றும் எல்இடி விளக்குகளில் சிறிய மாறுதல் கொடுக்கப்பட்டுள்ளது. இன்டிரியரை பொறுத்தவரை சிறிய அளவிலான ஸ்டைலிங் ட்விக்ஸ், 10.4 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், பனரோமிக் சன்ரூஃப், எம்ஜி இண்டர்நெட் இன்சைடு கனெக்ட்டிவிட்டி வசதிகள் இடம்பெற உள்ளது.
ஹெக்டர் பிளஸ் காரை எதிர்கொள்ள டாடா ஹாரியர் மற்றும் 7 இருக்கை பெற உள்ள கிராவிட்டாஸ், XUV500 மற்றும் 7 இருக்கை பெற உள்ள கிரெட்டா போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும்.