பெங்களூரை தலைமையிடமாக கொண்டு தொடங்கப்பட்டுள்ள ரிவோல்ட்டா மோட்டார்ஸ் என்ற புதிய எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனம் டெல்லி ஆட்டோ எக்ஸ்போ 2016யில் முதன்முறையாக அறிமுகம் செய்யப்பட உள்ளது.
சுற்றுச்சூழலுக்கு எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படுத்தாத ஜீரோ எமிஷன் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர்களை விற்பனைக்கு கொண்டு வர ரிவோல்ட்டா மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது.
ரிவோல்ட்டா அறிமுகம் செய்ய உள்ள மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் 80 கிமீ தூரம் வரை முழுமையாக ஒருமுறை சார்ஜ் செய்தால் பயணிக்க முடியும் . ரிவோல்ட்டா இருசக்கர வாகனங்களின் வேகம் மணிக்கு 60 கிமீ ஆகும். இதனை 80 சதவீத சார்ஜ செய்ய 2.5 மணி நேரங்கள் எடுத்துக்கொள்ளும்.
இந்தியாவில் ஹீரோ எலக்ட்ரிக் என்ற பெயரில் ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்தின் எலக்ட்ரிக் வாகனங்கள் நாடு முழுதும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. மற்றொரு எலக்ட்ரிக் பைக் நிறுவனமாக ரிவோல்ட்டா விளங்கும்.
Revolta Motors : Bangaluru based Revolta motors to showcase Electric motorcycles and scooters at 2016 Auto Expo in Delhi