ஹீரோ எலெக்ட்ரிக் வாகன நிறுவனத்தின் புதிய அறிமுகமாக வெளியிடப்பட்டுள்ள புதிய ஹீரோ AE-47 மின்சார பைக் சிங்கிள் சார்ஜில் அதிகபட்சமாக 160 கிமீ ரேஞ்சை ஈக்கோமோட் மூலமாக வழங்குவதுடன், அதிகபட்சமாக மணிக்கு 85 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறனை பெற்றுள்ளது.
இப்போதைக்கு, AE-47 இப்போது காட்சிப்படுத்தப்பட்டுள்ள நிலையில் விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம். இந்த மின்சார பைக் விலை ரூ 1.25 லட்சம் – ரூ. 1.50 லட்சத்திற்குள் அமையலாம்.
ஹீரோ எலக்ட்ரிக் ஏ.இ – 47 பைக்கில் உள்ள 4 கிலோ வாட் எலக்ட்ரிக் மோட்டார் மூலம் இயக்கப்படுகிறது, இதன் அதிகபட்ச வேகம் மணிக்கு 85 கிமீ ஆகும். AE-47 இலகுவாக நீக்கும் வகையிலான லித்தியம் அயன் 48V / 3.5 kWh பேட்டரியைக் கொண்டுள்ளது. நான்கு மணி நேரத்தில் முழுமையாக சார்ஜ் செய்ய முடியும். AE-47 இரண்டு விதமான ரைடிங் முறைகளைக் கொண்டுள்ள ஏஇ-47 பைக்கில் பவர் மற்றும் ஈக்கோ மோட் உள்ளது. ஈக்கோ மோடில் பயணித்தால் அதிகபட்சமாக 160 கிமீ ரேஞ்சு வழங்கும். பவர் மோடில் பயணித்தால் 85 கிமீ ரேஞ்சு வழங்கும்.
ஹீரோ AE-47 மின்சார பைக்கில் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமென்ட் கன்சோல், கீலெஸ் என்ட்ரி, மொபைல் சார்ஜர், வாக் அசிஸ்ட் மற்றும் ரிவர்ஸ் மோட்அம்சத்தைக் கொண்டுள்ளது. மின்சார மோட்டார் சைக்கிள் ஜிபிஎஸ், ஜிபிஆர்எஸ் வசதி, நிகழ்நேர கண்காணிப்பு மற்றும் ஜியோ-ஃபென்சிங் ஆகியவற்றைக் கொண்ட மொபைல் ஆப் மூலம் ஆதரிக்கப்படுகிறது.