டாடா மோட்டார்ஸ் தனது பாரம்பரியமான சியரா காரை மீண்டும் அறிமுகம் செய்ய உள்ளதை வெளிப்படுத்தும் வகையில் முதன்முறையாக கான்செப்ட் மாடலை ஆட்டோ எக்ஸ்போவில் காட்சிப்படுத்தியுள்ளது.
இந்த கான்செப்ட் கார் விற்பனையில் உள்ள டாடா நெக்ஸான் மற்றும் ஹாரியர் எஸ்யூவி கார்களுக்கு இடையில் நிலை நிறுத்தப்பட்டுள்ளது. அதாவது கிரெட்டா உட்பட செல்டோஸ் போன்ற எஸ்யூவிகளுக்கு போட்டியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
சியரா கான்செப்ட் கார் ஆல்ஃபா பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட உள்ள நிலையில் பவர் ட்ரெயின் விபரங்கள் வெளியிடப்படவில்லை. அனேகமாக இந்த கார் பெட்ரோல் என்ஜின் மற்றும் எலெக்ட்ரிக் வெர்ஷன் என இரண்டிலும் கிடைக்க வாய்ப்புள்ளது.