ரெனோ க்விட் கார் 70000 க்கு மேற்பட்ட முன்பதிவுகளுடன் சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ள நிலையில் க்விட் காரின் காத்திருப்பு காலம் சென்னை மழையால் 10 மாதங்கள் வரை அதிகரிக்கின்றது.
சென்னை கனமழை ஏற்பட்ட வெள்ளத்தால் சிறு தொழில் முதல் ஐடி துறை வரை முடங்கி போய் உள்ள நிலையில் க்விட் காரின் காத்திருப்பு காலம் கூடுதலாக அதிகரிக்க உள்ளது. க்விட் காரின் உதிரிபாகங்கள் உற்பத்தியாளர்கள் மற்றும் ரெனோ தொழிலாளர்கள் இன்னும் முழுமையான நிலைக்கு திரும்ப இன்னும் சில நாட்கள் ஆகலாம்.
ஆல்ட்டோ 800 மற்றும் இயான போன்ற கார்களுக்கு போட்டியாக வந்த க்விட் யாரும் எதிர்பார்க்காத வெற்றியை பதிவு செய்துள்ளது. 53.2பிஹெச்பி ஆற்றலை வழங்கும் 800சிசி என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது . இதன் டார்க் 72என்எம் ஆகும் இதில் 5 வேக மெனுவல் கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும் வரும் காலத்தில் க்விட் காரில் ஏஎம்டி மற்றும் 1.0 லிட்டர் என்ஜின் பொருத்தப்பட்ட மாடல் வரவுள்ளது. கடந்த நவம்பர் மாதம் ரெனோ நிறுவனம் 7819 கார்களை விற்பனை செய்து 144 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. க்விட் கார் மட்டும் இதில் 5,469 ஆகும்.
Renault Kwid bookings crossed 70000+