புனேவே தலைமையிடமாக கொண்டு செயல்படும் எவெர்வி மோட்டார்ஸ் (Everve motors) நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் ஆட்டோ எக்ஸ்போவில்அறிமுகம் செய்யப்பட உள்ளது. அதிகபட்சமாக இந்த இ-ஸ்கூட்டர் மணிக்கு 110 கிமீ வேகத்தை எட்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்டோ எக்ஸ்போவில் பல்வேறு புதிய அறிமுகங்கள் வெளியாக உள்ள நிலையில் எலெக்ட்ரிக் வாகனங்கள் மிக முக்கியமான இடத்தைப் பெற உள்ளது. அந்த வகையில் இரு சக்கர வாகனங்களில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் அறிமுகங்கள் அதிக கவனத்தை பெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பிப்ரவரி 6 ஆம் தேதி வெளியிடப்பட உள்ள இந்த மின் ஸ்கூட்டரில் வழங்கப்பட உள்ள சக்தி வாய்ந்த பேட்டரியை சார்ஜ் செய்வதற்கு 5 மணி நேரமும், அதே நேரத்தில் 5 ஆம்பியர் சார்ஜ் கொண்டும் சார்ஜ் செய்ய இயலும்.
இந்த மாடலின் முன்மாதிரி ஆட்டோ எக்ஸ்போவில் வெளியிடப்பட உள்ள நிலையில், குறிப்பாக பேட்டரி நிலை, வரைபடங்கள், இருப்பிடம், பிழைக் குறியீடுகள், சவாரி முறைகள் மற்றும் பூஸ்ட் போன்றவறை வழங்கும் வகையிலான முழு டிஜிட்டல் கன்சோலைப் பெறுகிறது. எல்.ஈ.டி விளக்குகள் மற்றும் முன்புற அமைப்பு, தரைத்தளம் மற்றும் பக்க பேனல்களை பொறுத்தவரை ஸ்டைலிஷான எதிர்கால மாடலாக இந்த ஸ்கூட்டரைக் காட்டுகின்றன. இப்போதைக்கு, ஸ்கூட்டர் இன்னும் உற்பத்தி நிலையை எட்டாமல் அதன் முன்மாதிரி நிலையில் உள்ளது. மேலும் 2020 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் உற்பத்திக்கு வரும்.
மேலும் படிங்க – ஆட்டோ எக்ஸ்போ 2020 செய்திகள்