ரோல்ஸ்-ராய்ஸ் நிறுவனத்தின் பிரசத்தி பெற்ற எஸ்யூவி மாடலான கல்லினன் பிளாக் பேட்ஜ் விற்பனைக்கு ரூபாய் 8 கோடி 20 லட்சம் (எக்ஸ்ஷோரூம்) விலையில் இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது.
8 கோடி 20 லட்சம் விலையில் வெளியிடப்பட்டுள்ள கருமை நிற கல்லினன் எஸ்யூவி காரில் கூடுதலான கஸ்டமைஸ் வசதிகளை மேற்கொள்ளும் வகையில் வழங்கப்பட்டுள்ள இந்த மாடல் உலகின் மிக பெரும் பணக்காரர்களின் விருப்பமான எஸ்யூவி காராக விளங்குகின்றது. சாதாரன மாடலை விட கூடுதலான பவர் மற்றும் டார்க்கினை வெளிப்படுத்துகின்றது.
இந்த காரில் வழங்கப்பட்டுள்ள 6750 சிசி, வி 12 எஞ்சின் 5250 ஆர்.பி.எம்-மில் 600 ஹெச்பி பவர் மற்றும் 1700 ஆர்.பி.எம்-மில் 900 என்எம் டார்க் வெளிப்படுத்தும். அதிகபட்ச வேகம் மணிக்கு 250 கிமீ ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மணிக்கு 0-100 கிமீ வேகத்தை எட்டுவதற்கு 4.90 வினாடிகளை எடுத்துக் கொள்ளும்.
உயர்ரக ஆடம்பர எஸ்யூவி காரில் அதிகப்படியான கஸ்டமைஸ் செய்யப்பட்ட பல்வேறு பிரத்தியேக வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. குறிப்பாக பின் இருக்கை பொழுதுபோக்கு அம்சங்களில் 12 அங்குல டிவி, 18 ஸ்பீக்கர்கள், முன் மற்றும் பின்புற பார்க்கிங் கன்ட்ரோல் 12.5 GB ஹார்ட் டிரைவ், எலெக்ட்ரானிக் முறையில் இயங்கும் பூட் கேட் என பல்வேறு ஆடம்பர வசதிகளை கொண்டுள்ளது.