பஜாஜ் ஆட்டோ மற்றும் ட்ரையம்ப் மோட்டார் சைக்கிள் கூட்டணி வாயிலாக ரூ. 2 லட்சத்திற்குள்ளான விலையில் ட்ரையம்ப பைக் விற்பனைக்கு 2022 ஆம் ஆண்டில் வெளியாகும். முதல் பைக் 250-350 சிசி என்ஜினை பெற்றதாக விற்பனைக்கு வரக்கூடும்.
பஜாஜ்-ட்ரையம்ப் கூட்டணி அதிகாரப்பூர்வ் அறவிப்பு வெளியாகியுள்ள நிலையில், 200 சிசி முதல் 750 சிசி வரையிலான திறன் பெற்ற என்ஜின் மற்றும் புதிய வாகனங்களை பல்வேறு மாறுபட்ட பிரிவுகளில் ட்ரையம்ப் பிராண்டு மூலம் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளனர். இருப்பினும் அவை எதுவும் பஜாஜ் பெயரில் விற்பனைக்கு வராது. அதற்கு பதிலாக, பஜாஜின் சக்கான் ஆலையில் தயாரிக்கும் அனைத்து பைக்குகளும் ட்ரையம்ப் பிராண்ட் பெயரில் விற்கப்படும். இந்த புதிய பைக்குகள், ட்ரையம்பின் ‘பாரம்பரிய’ பெயர்களையும் பயன்படுத்தியே விற்பனைக்கு வரும். இது பைக்குகள் ரெட்ரோ ஸ்டைல் பெற்ற மாடல்களாக இருக்கலாம் என்பதற்கான குறிப்புகளையும் உறுதிப்படுத்தியள்ளது.
இந்தியா மட்டுமல்லாமல் சர்வதேச அளவில் விற்பனை செய்யப்பட உள்ள இந்த பைக்குகள் பல்வேறு புதிய நாடுகளுக்கும் பஜாஜ் மூலமாக விற்பனைக்கு எடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் பஜாஜின் ஏற்றுமதி சந்தை பெருமளவு விரிவுப்படுத்திக் கொள்ள வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
வரவிருக்கும் மோட்டார் சைக்கிள் மாடல்கள் ட்ரையம்பின் ‘பொன்னேவில்லி’, ‘ஸ்ட்ரீட்’ மற்றும் ‘டைகர்’ போன்ற பெயர்களைத் தொடர்ந்து பயன்படுத்தும். இந்த புதிய மாடல்கள், ராயல் என்ஃபீல்ட் கிளாசிக் 350, ஜாவா ஜாவா மற்றும் பெனெல்லி இம்பீரியல் 400 போன்ற போட்டியாளர்களுக்கு எதிராக 250-350 சிசி வரம்பில் ஒரு கிளாசிக் மோட்டார் சைக்கிள் முதல் மாடலாக இந்த கூட்டணியில் விற்பனைக்கு வெளியாக உள்ளது.