ரூ.4.65 லட்சம் ஆரம்ப விலையில் வெளியிடப்பட்டுள்ள டாடா டியாகோ இந்நிறுவனத்தின் அதிகம் விற்பனை ஆகின்ற கார்களில் முதன்மையான இடத்தை பெற்று விளங்குகின்றது. தற்போது மேம்பட்ட மாடல் பல்வேறு மாற்றங்களை பெற்று வந்துள்ளது.
முந்தைய மாடலின் தோற்ற அமைப்பிலிருந்து டியாகோ தற்போது மேம்படுத்தப்பட்டுள்ளது. ஃபேஸ்லிஃப்ட் புதிய கிரில் மற்றும் குரோம் ஸ்ட்ரிப் உடன் புதுவிதமான ட்ரை ஏரோ தோற்ற அமைப்பினை கொண்டுள்ளது. இரட்டை நிறத்திலான அலாய் வீல், கருப்பு நிறத்தை பெற்ற மேற்கூறை மற்றும் ஓஆர்விஎம் கொண்டுள்ளது.
பிஎஸ்4 பெட்ரோல் மற்றும் டீசல் என்ஜின் இடம்பெற்றிருந்த நிலையில், இனி வரவுள்ள மாடலில் 1.05 டீசல் என்ஜின் கைவிடப்பட உள்ளது. பிஸ்6 பெட்ரோல் என்ஜின் தொடர்ந்து 86 ஹெச்பி மற்றும் 113 என்எம் டார்க் வெளிப்படுத்தும். இதில் 5 வேக மேனுவல் மற்றும் 5 வேக ஆட்டோமேட்டிக் மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும்.
சமீபத்தில் இந்த மாடல் குளோபல் என்சிஏபி சோதனையின் மூலம் கிராஷ் டெஸ்டில் 4 நட்சத்திர மதிப்பீட்டை பெற்றுள்ளது. குறிப்பாக குழந்தைகள் பாதுகாப்பில் மூன்று நட்சத்திரங்களை கொண்டுள்ளது.
பிஎஸ் 6 | விலை ( எக்ஸ்ஷோரூம்) |
---|---|
Tiago XE | ரூ. 4.60 லட்சம் |
Tiago XT | ரூ. 5.20 லட்சம் |
Tiago XZ | ரூ. 5.70 லட்சம் |
Tiago XZ+ | ரூ. 5.99 லட்சம் |
Tiago XZ+ DT | ரூ. 6.10 லட்சம் |
Tiago XZA | ரூ. 6.20 லட்சம் |
Tiago XZA+ | ரூ. 6.60 லட்சம் |
மேலும் படிங்க – ரூ.5.29 லட்சத்தில் வந்த டாடா அல்ட்ரோஸ் விபரம்
ரூ.6.95 லட்சத்தில் வந்த டாடா நெக்ஸான் எஸ்யூவி விபரம்