இந்தியாவின் 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்ற கார்களில் ஒன்றான டாடா மோட்டார்சின் அல்ட்ராஸ் காரின் ஆரம்ப விலை ரூ.5,29,000 முதல் துவங்குகின்றது. பிரீமியம் ஹேட்ச்பேக் சந்தையில் கிடைக்கின்ற பலேனோ, எலைட் ஐ20, ஜாஸ் போன்ற மாடல்களை நேரடியாக எதிர்கொள்ள உள்ளது.
சமீபகாலமாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தன்னுடைய கார்களின் வடிவமைப்பு மொழியின் அம்சத்தை பன்மடங்கு உயர்த்தியுள்ளதை போன்றே பாதுகாப்பு சாரந்த அம்சங்களிலும் சர்வதேச அளவில் தரத்தை உறுதிப்படுத்த துவங்கியுள்ளது. 2018 ஆட்டோ எக்ஸ்போவில் 45 எக்ஸ் என்ற பெயரில் வெளியிடப்பட்ட கான்செப்ட்டின் உற்பத்தி நிலை மாடல் தான் அல்ட்ராஸ் என விற்பனைக்கு வந்துள்ளது. காட்சிப்படுத்தப்பட்ட கான்செப்ட் நிலை மாடலுக்கும் உற்பத்தி நிலை மாடலுக்கும் பெரிய அளவில் வித்தியாசம் இல்லாமல் உற்பத்திக்கு எடுத்துச் சென்று விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. அல்ட்ராசின் பெயர் பின்னணி என்ன தெரியுமா..? கடலில் வாழ்கின்ற அல்பட்ரோஸ் (albatross ) என்ற பறவையின் பெயரினை பின்னணியாக கொண்டுதான் இந்த காருக்கான பெயர் அல்ட்ரோஸ் என உருவாக்கப்பட்டுள்ளது.
டிசைன்
பிரீமியம் வசதிகளை கொண்ட இந்த ஹேட்ச்பேக் காரின் 45x கான்செப்ட் உற்பத்தி நிலை மாடலாக மாறுவதற்கு இந்நிறுவனத்தின் இம்பேக்ட் 2.0 டிசைன் மொழி முக்கிய காரணமாகும். கான்செப்ட் மாடலே விற்பனைக்கு வரவுள்ள மாடலுக்கு இணையாக அமைந்திருப்பது மிகப்பெரிய பலமாகும். இந்நிறுவனத்தின் புதிய ALFA (Agile, Light, Flexible and Advanced) பிளாட்ஃபாரத்தில் வடிவமைக்கப்பட்ட முதல் மாடலாக விளங்குகின்றது. ஹெட்லைட் அமைப்பு மற்றும் கிரில் தோற்றம் மிகவும் கவர்ச்சிகரமான வெளிப்பாடினை கொண்டுள்ளது. பக்கவாட்டில் அமைந்துள்ள வளைவான லைன்கள் மற்றும் பின்புறத்தில் உள்ள கருமை நிறம் இந்த காருக்கு கூடுதல் கவர்ச்சியை உறுதிப்படுத்துகின்றது.
தாராளமாக 5 நபர்களும் அமரும் வகையிலான இருக்கையை பெற்றுள்ள இந்த மாடலின் வீல்பேஸ் 2501 மிமீ ஆகும். இந்த மாடல் 3990 மிமீ நீளம், 1755 மிமீ அகலம், 1523 மிமீ உயரம் மற்றும் 2501 மிமீ வீல்பேஸ் கொண்டுள்ளது. இது 165 மிமீ கிரவுண்ட் கிளியரண்ஸ் கொண்டுள்ளது. எரிபொருள் டேங்க் 37 லிட்டர் கொள்ளளவு கொண்டுள்ளது. 185/60 R16 (பெட்ரோல்) மற்றும் 195/55 R16 (டீசல்) லேசர் கட் அலாய் வீல் கொண்டுள்ளது. மேலும், டீசல் ஆல்ட்ரோஸ் 1150 கிலோ எடையையும், பெட்ரோல் பதிப்பு 1036 கிலோ எடையும் கொண்டுள்ளது.
90 டிகிரி முறையில் கதவினை திறக்கும் வசதி கொண்டுள்ள இந்த மாடலில் இரட்டை நிறங்கள், பல்வேறு கஸ்டமைஸ் வசதிகள், எல்இடி டெயில் லைட் அதனை சுற்றி வழங்கப்பட்டுள்ள கருப்பு நிற இன்ஷர்ட், மேலும் காரினை சுற்றி அதிகப்படியான கருப்பு நிற இன்ஷர்ட்கள் கொண்டு கவர்ச்சியை மேலும் அதிகரிக்கின்றது.
16 அங்குல வீல், ஸ்டைலிஷான புராஜெக்டர் ஹெட்லைட், எல்இடி ரன்னிங் விளக்குகள், கருமை நிற இன்ஷர்ட்டுகள் பின்புற டெயில் கேட் கருப்பு நிறம் காரின் தோற்றத்துக்கான கவனத்தை பெறுவது கவனத்தை ஈர்க்கின்றது. கவனிக்கதக்க மற்றொன்று இந்த காரின் பின்புற கதவிற்கான கைப்படி சி பில்லரில் கருப்பு நிறத்தில் இணைக்கப்பட்டுள்ளது. ஸ்டீரிட் கோல்டு, சில்வர், சிவப்பு, கிரே மற்றும் வெள்ளை என 5 விதமான நிறங்களில் இந்த கார் கிடைக்கின்றது.
இன்டிரியர்
வெளிதோற்றத்தை போலவே இன்டிரியர் அமைப்பிற்கு பல்வேறு விதமான முக்கிய வசதிகளில் குறிப்பாக ஃப்ரீ-ஸ்டாண்டிங் முறையில், 7.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் தனித்துவமான அம்சங்களாக இந்த மாடல் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே உள்ளிட்ட முன்னணி ஸ்மார்ட்போன் ஆப் பயன்பாடுகளின் ஆதரவுடன் வந்துள்ளது. நேவிகேஷன் வசதி ஸ்மார்ட்போனை இணைக்க மிகவும் சுலபமான வசதியை கொண்டுள்ளது.
மிகவும் தரமான பிளாஸ்டிக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ள இந்த காரில் 15 லிட்டர் கொள்ளளவு கொண்ட கூலிங் ஆப்ஷனுடன் கூடிய க்ளோவ் பாக்ஸ், மொபைல், டெப்ளெட் வைப்பதற்கான பாதுகாப்பான ஸ்டோரேஜ், 1 லிட்டர் பாட்டில் வைப்பதற்கான ஹோல்டர், குடை வைப்பதற்கான இடம், கியர் நாப்பில் லெதர் சுற்றப்பட்டுள்ளது.
ஆல்ட்ரோஸ் மாடலில் புதிய டிஜிட்டல் கிளஸ்ட்டர் வழங்கப்பட்டு இந்த கிளஸ்ட்டர் கருவியில் அனலாக் முறையிலான ஸ்பீடோமீட்டர், டிஜிட்டல் முறையிலான டேக்கோ மீட்டர் இணைக்கப்பட்டுள்ளது. புத்தம் புதிய ஸ்டீயரிங் வீலை இந்த மாடல் பெறுகின்றது. 2501 மீமீ வீல்பேஸ் கொண்ட அல்ட்ராஸ் காரில் 5 நபர்கள் அமர்ந்து பயணிக்கும் வகையில் மிகவும் தாராளமான மற்றும் அகலமான இருக்கை வசதி, 6 அடி உயரமுள்ளவர்களும் கூட சிறப்பாக அமர்ந்து செல்லும் வகையில் ஹெட் ரூம் மற்றும் முழங்கால் மற்றும் காலுக்கான இடவசதி உள்ளது. பின்புறத்தில் 345 லிட்டர் பூட் ஸ்பேஸ் உள்ளது.
அல்ட்ராஸ் என்ஜின்
1.5 லிட்டர், 4 சிலிண்டர், பிஎஸ் 6 டீசல் என்ஜின் மூலம் இயக்கப்படுகின்ற அல்ட்ராஸில் 4000 ஆர்.பி.எம்-மில் 90 பிஎஸ் பவர், 1250-3000 ஆர்.பி.எம்-மில் 200 என்எம் டார்க்கையும் வங்குகின்றது. இந்த என்ஜின் 5 ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.
பிஎஸ் 6 பெட்ரோல் என்ஜின் 1.2 லிட்டர், 3-சிலிண்டர் அதிகபட்சமாக 6000 ஆர்.பி.எம்-மில் 86 பிஎஸ் பவர் மற்றும் 3300 ஆர்.பி.எம்-மில் 113 என்எம். இந்த என்ஜின் 5-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷனுடன் இணைக்கப்பட்டுள்ளது.
இரு என்ஜின்களுமே சிறப்பான டிரைவிங் தன்மையை வெளிப்படுத்துகின்றது. குறிப்பாக டீசல் என்ஜினை பொறுத்தவரை குறைந்த வேகம் மற்றும் இலகுவாக அதிகபட்ச வேகத்தை எட்டுவதற்கு சிறப்பான முறையில் கியர் ஷிஃப்ட் அமைந்திருப்பது மிகப்பெரிய பலமாக உள்ளது.போட்டியாளர்களை விட சற்று பெட்ரோல் என்ஜின் தங்குவது போல உணர முடிகிறது. மற்றபடி சிறப்பான திறனை வழங்குகின்றது.
வேரியண்ட்
அல்ட்ராஸ் காரில் XE, XM, XT, XZ மற்றும் XZ (O) என ஐந்து வேரியண்டுகளும், Rhythm, Style, Luxe மற்றும் Urban என நான்கு கஸ்டமைஸ் ஆப்ஷன் வழங்கப்படுகின்றது. டாப் வேரியண்ட் XZ (O) மாடலுக்கு எந்தவிதமான கஸ்டமைஸ் வசதியும் வழங்கப்படவில்லை.
டாப் வேரியண்டில், 16 அங்குல இரட்டை நிற அலாய் வீல், ப்ரொஜெக்டர் ஹெட்லேம்ப், ஆட்டோ ஏசி கட்டுப்பாடு, ஆம்பியன்ட் விளக்குகள், ஆட்டோ ஹெட்லேம்ப், பின்புற ஏசி வென்ட், மழை உணர்திறன் வைப்பர் மற்றும் அணியக்கூடிய வகையிலான கீ மற்றும் முன், பின் இருக்கைகளுக்கு ஆர்ம் ரெஸ்ட் போன்றவை இணைக்கப்பட்டுள்ளது.
சிறப்பு வசதிகள்
மிக ஸ்டைலிஷான புராஜெக்ட்ர் ஹெட்லைட், பகல் நேர ரன்னிங் விளக்குகள், 16 அங்குல லேசர் கட் அலாய் வீல், காரின் பின்புற கதவு கைப்பிடி ஆனது சி பில்லரிலும், 90 டிகிரி கோணத்தில் கதவுகளை திறக்கும் வசதியும் வழங்கப்பட்டுள்ளது.
5 இருக்கை வசதியுடன், 7.0 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டத்தில் ஆப்பிள் கார் பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு வசதிகள்
பொதுவாக அனைத்து வேரியண்டுகளிலும் ஏபிஎஸ் மற்றும் இபிடி, ரியர் பார்க்கிங் சென்சார், வேக எச்சரிக்கை உடன் டிரைவிங் மோட் (சிட்டி மற்றும் ஈக்கோ) வருகிறது. இதன் முன் சக்கரங்களில் டிஸ்க் பிரேக்குகள் மற்றும் பின்புற டயரில் டிரம் பிரேக்குகளுடன் பொருத்தப்பட்டுள்ளது. அல்ட்ரோஸ் காரின் அனைத்து வேரியண்டிலும் இரட்டை முன் ஏர்பேக்குகள் மட்டுமே பெறுகிறது.
இந்த மாடல் குளோபல் என்சிஏபி மைய கிராஷ் டெஸ்ட் சோதனையில், 5 நட்சத்திர மதிப்பீட்டை வயது வந்தோர் பாதுகாப்பிலும், 3 நட்சத்திர மதிப்பீட்டை குழந்தைகள் பாதுகாப்பு பிரிவில் பெற்றுள்ளது. அதாவது, வயதுவந்தோர் பாதுகாப்பில் அல்ட்ராஸ் மாடலுக்கு 17 புள்ளிகளில் 16.13 புள்ளிகளைப் பெற்றுள்ளது. குழந்தை சார்ந்த பாதுகாப்பு அமைப்பில் 49 புள்ளிகளுக்கு 29 புள்ளிகளை மட்டுமே எடுத்தது.
போட்டியாளர்கள்
அல்ட்ரோஸ் காருக்கு நேரடி போட்டியை இந்தியாவில் அதிகம் விற்பனையாகின்ற பரிமீயம் ஹேட்ச்பேக் கார்களிர் மாருதி பலேனோ முதலிடத்தில் உள்ளது. அடுத்தப்படியாக ஹூண்டாய் ஐ20, பலேனோ அடிப்படையிலான டொயோட்டா கிளான்ஸா மற்றும் ஹோண்டா ஜாஸ் போன்ற மாடல்கள் ஏற்படுத்த உள்ளது.
டாடா அல்ட்ராஸ் விலை பட்டியல்
பிஎஸ் 6 என்ஜினை பெறுகின்ற டாடா அல்ட்ராஸ் ஆரம்ப விலை ரூ.5.29 லட்சம் முதல் துவங்கி அதிகபட்சமாக ரூ.9.29 லட்சம் விலையில் நிறைவடைகின்றது. இங்கே கொடுக்கப்பட்டுள்ள விலை அறிமுக ஆரம்ப விலை ஆகும். மேலும் இந்தியாவின் எக்ஸ்ஷோரூம் ஆகும்.
Prices BS6 | Ex-sh, ரூ. |
---|---|
Altroz Petrol XE | 5,29,000 |
Altroz Petrol XM | 6,15,000 |
Altroz Petrol XT | 6,84,000 |
Altroz Petrol XZ | 7,44,000 |
Altroz Petrol XZ(O) | 7,69,000 |
Altroz Diesel XE | 6,99,000 |
Altroz Diesel XM | 7,75,000 |
Altroz Diesel XT | 8,44,000 |
Altroz Diesel XZ | 9,04,000 |
Altroz Diesel XZ (O) | 9,29,000 |