பாரத் ஸ்டேஜ் 6 மாசு உமிழ்வுக்கு இணக்கமான என்ஜினை பெற்ற அடுத்த மாடலாக செலிரியோ காரை மாருதி சுசுகி விற்பனைக்கு வெளியிட்டுள்ளது. முந்தைய மாடலை விட ரூ.14,000 முதல் ரூ.24,000 வரை விலை உயர்த்தப்பட்டுள்ளது.
தனது பெரும்பாலான மாடல்களை பிஎஸ்6 நடைமுறைக்கு மாருதி மிக தீவரமாக ஈடுபட்டு வருகின்றது. அந்த வரிசையில் செலிரியோ காரை தற்போது பிஎஸ்6 -க்கு மாற்றியுள்ளது.
தோற்றம் மற்றும் வசதிகளில் எந்தவொரு மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை. என்ஜினை பொறுத்தவரை, செலிரியோ அதே 998 சிசி, மூன்று சிலிண்டர் பெட்ரோல் எஞ்சினுடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த என்ஜின் தற்போது 68 ஹெச்பி மற்றும் 90 என்எம் டார்க் உற்பத்தி செய்கிறது. இதில் 5-ஸ்பீட் மேனுவல் அல்லது ஏஎம்டி தானியங்கி கியர்பாக்ஸ் பெறலாம்.
மாருதி சுசுகி செலிரியோ அடிப்படை LXi வேரியண்டிற்கு ரூ .4.41 லட்சம் முதல் ZXi (O) ஏஎம்டிக்கு ரூ .5.67 லட்சம் வரை விலை நிர்ணையிக்கப்பட்டுள்ளது.