எம்ஜி ஹெக்டர் வெற்றியை தொடர்ந்து அடுத்து இசட்எஸ் இ.வி விற்பனைக்கு வெளியிட உள்ள நிலையில் ஆட்டோ எக்ஸ்போ 2020 அரங்கில் இணையம், எலெக்ட்ரிக் மற்றும் தானியங்கி சார்ந்த 14 கார்களை ஹேட்ச்பேக், செடான் மற்றும் யுட்டிலிட்டி வாகனங்கள் பிரிவில் காட்சிக்கு வைக்க உள்ளது.
எம்ஜி ஹெக்டர் வெற்றியை தொடர்ந்து அடுத்து இசட்எஸ் இ.வி விற்பனைக்கு வெளியிட உள்ள நிலையில் ஆட்டோ எக்ஸ்போ 2020 அரங்கில் இணையம், எலெக்ட்ரிக் மற்றும் தானியங்கி சார்ந்த 14 கார்களை ஹேட்ச்பேக், செடான் மற்றும் யுட்டிலிட்டி வாகனங்கள் பிரிவில் காட்சிக்கு வைக்க உள்ளது.
இந்நிறுவனம் எதிர்காலத்தில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ள வாகனங்கள் மற்றும் அதன் சார்ந்த நுட்பங்களை காட்சிப்படுத்துவதுடன், Vision-i என்ற கான்செப்ட்டின் முதல் டீசரை வெளியிட்டடுள்ளது. இந்த கான்செப்ட் முன்பாக 2019 ஷாங்காய் மோட்டார் ஷோவில் காட்சிப்படுத்தப்பட்ட ரோவி ஐ கான்செப்ட் போலவே உள்ளது. இது எஸ்.ஏ.ஐ.சி குழுமத்தின் எதிர்கால வாகனங்களின் கனெக்ட்டிவிட்டி, இணையம் மற்றும் ஓட்டுநரில்லா தானியங்கி கார் நுட்பத்தை கொண்டதாக காட்சிப்படுத்தப்பட்டது.
எம்.ஜி. மோட்டார் இந்தியாவின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான ராஜீவ் சாபா ஆட்டோ எக்ஸ்போ 2020 மாடல்கள் பற்றி கூறுகையில் , “இந்தியாவில் நீண்ட கால தேவைக்கேற்ப சுற்றுச்சூழல் சார்பாக, அடுத்த தலைமுறை வாகனங்களை ஏற்றுக்கொள்வதை விரைவுபடுத்த எம்ஜி மோட்டார் இந்தியா கொண்டு வர உறுதி பூண்டுள்ளது. இந்த இலக்கை அடைய, எங்கள் தொழில்நுட்ப தலைமையாக உருவாக்குவதையும், இந்திய வாகன சந்தையில் எங்களின் பங்களிப்பை மேலும் பலப்படுத்துவதனையும் நோக்கமாகக் கொண்டுள்ளோம். இந்தியாவுக்கான எதிர்கால தொழில்நுட்பங்களை மையமாகக் கொண்ட இந்த ஆண்டின் ஆட்டோ எக்ஸ்போவில் நாங்கள் கொண்டு வரும் மாடல்களே ஒரு சான்றாகும். எக்ஸ்போவில் இடம்பெற உள்ள அனைத்து எம்ஜி தயாரிப்புகளும் புதுமை, சிறப்பான வாடிக்கையாளர் அனுபவம் மற்றும் தலைமையிலான வளர்ச்சி ஆகியவற்றில் எங்கள் முக்கிய கவனம் செலுத்தும் நோக்கில் செயல்படுகின்றோம். ” என குறிப்பிட்டுள்ளார்.