டிவிஎஸ் மற்றும் பிஎம்டபிள்யூ கூட்டணியில் முதல் கான்செப்ட் ஸ்டன்ட் ஜி 310 மாடலை சில மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து முதன் முறையாக 500சிசி க்கு குறைவான புதிய ரோட்ஸ்டெர் பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் வந்துள்ளது.
பிஎம்டபிள்யூ G 310 R
என்ஜின்
டிவிஎஸ் பிஎம்டபிள்யூ G 310 R பைக்கின் உச்சகட்ட வேகம் மணிக்கு 145கிமீ ஆகும் . ஜி 310 ஆர் மைலேஜ் லிட்டருக்கு 30 கிமீ ஆகும்.
முன்பக்கத்தில் 4 பிஸ்டன் கேலிபரை கொண்ட 300மிமீ டிஸ்க் பின்புறத்தில் 2 பிஸ்டன் கேலிபரை கொண்ட 240மிமீ டிஸ் பிரேக்குடன் ஏபிஎஸ் நிரந்தர அம்சமாக இணைக்கப்பட்டுள்ளது.
டியூப்லர் ஸ்டீல் ஃபிரேமால் கட்டமைக்கப்பட்டுள்ள ஜி 310 ஆர் பைக்கின் எடை 158கிலோ ஆகும் இதன் முன்புறத்தில் 41மிமீ விட்டம் கொண்ட அப்சைடு டவுன் ஃபோர்க்குகளை பெற்றுள்ளது. பின்புறத்தில் அட்ஜெஸ்டபிள் மோனோ சாக் அப்சார்பரினை பெற்று விளங்குகின்றது.
துனைகருவிகள்
பிஎம்டபிள்யூ G 310 R பைக்கில் துனைகருவிகளாக 12வோல் சார்ஜிங் போர்ட் , லக்கேஜ் பேக் , ஹீட்டேட் கிரிப் , எல்இடி இன்டிகேட்டர் , சென்டர் ஸ்டேன்டு போன்றவற்றை பெறலாம்.
வருகை
பிஎம்டபிள்யூ G 310 R பைக் இந்தியாவில் வரும் ஆட்டோ எக்ஸ்போ 2016யில் பார்வைக்கு வரவுள்ளது. அதனை தொடர்ந்து விற்பனைக்கு வரவுள்ளது.
விலை
பிஎம்டபிள்யூ G 310 R பைக் இந்தியாவிலே டிவிஎஸ் நிறுவனத்தால் பிஎம்டபிள்யூ பேட்ஜில் தயாரிக்கப்பட உள்ளதால் ஆன்ரோடு விலை ரூ. 2 லட்சம் முதல் 2.80 லட்சத்திற்க்குள் இருக்கலாம்.