ஹோண்டா சிபி ஷைன் SP என்ற பெயரில் புதிய 125சிசி மிஸ்ட்ரி பைக் வரும் 19ந் தேதி விற்பனைக்கு வருகின்றது. ஹோண்டா ஷைன் எஸ்பி மாடல் ஷைன் மாடலை விட கூடுதலான விலையில் இருக்கும்.
வரும் 19ந் தேதி ஷைன் எஸ்பி மற்றும் சிபி ஹார்னட் 160 ஆர் என இரண்டு மாடல்களும் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஸ்டன்னருக்கு மாற்றாக சிபி ஷைன் பைக்கினை விட பிரிமியமாக இந்த மாடல் அமையும்.
சிபி ஷைன் பைக்கை விட கூடுதலாக ஆற்றலை வழங்கும் வகையில் 125சிசி என்ஜின் மேம்படுத்தப்பட்டிருக்கும். மேலும் சிபி ஷைன் எஸ்பி பைக்கில் புதிய 10 ஸ்போக் அலாய் வீல் , புதிய டெயில் விளக்கு , புகைப்போக்கி லிவோ பைக்கினை போன்றது , சிவப்பு வண்ண பின்புற சஸ்பென்ஷன் ஸ்பீரிங் , புதிய கிராஃபிக்ஸ் மற்றும் முகப்பு விளக்கு வைசர் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
image bikeadvice
சிபி ஷைன் மாடலை விட ஷைன் SP பைக் விலை ரூ. 1000 முதல் 2000 வரை கூடுதலாக இருக்கலாம்.
Honda CB Shine SP to launch on 19th