குறைவான விலையில் நிறைவான காரினை தரவேண்டும் என்ற நோக்கத்தில் ரெனோ -நிசான் கூட்டணியில் உருவான CMF-A பிளாட்பாரத்தில் உருவாக்கப்பட்ட ரெனோ க்விட் உதிரிபாகங்கள் 98 சதவீதம் இந்தியாவிலே உருவாக்கப்பட்டதாகும்.
லிட்டருக்கு 25.17 கிமீ மைலேஜ் தரக்கூடிய 800சிசி பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. தாரளமான இடவசதி மற்றும் சிறப்பபான கையாளும் திறன் கொண்டுள்ள க்விட் காரின் மினி எஸ்யூவி தோற்றம் சிறப்பான வரவேற்பினை பெற முக்கிய காரணமாகும்.
முதல்முறை கார் வாங்குபவர்களுக்கான சரியான தேர்வாக அமைந்த ஆல்ட்டோ 800 மற்றும் இயான் கார்களை விட கூடுதலான வசதிகள் மைலேஜ் போன்ற காரணங்களால் ரெனோ க்விட் அறிமுகம் செய்த ஒரே மாதத்தில் 50,000 முன்பதிவுகளை கடந்துள்ளது.
சிறப்பான விற்பனை எண்ணிக்கை பதிவுசெய்ய தொடங்கியுள்ள ரெனோ க்விட் காரின் உற்பத்தியை ரெனோ அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. மேலும் மாதம் 10,000 கார்களை விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளது.
Renault Kwid crosses 50,000 bookings