ஜெனரேஷன் Z என்ற பெயரில் மெர்சிடிஸ் பென்ஸ் குறிப்பிடும் இந்த மாடலின் நோக்கம் 1995ம் ஆண்டிற்க்கு பிறகு பிறந்தவர்களுக்கான மாடலாக இதனை மெர்சிடிஸ் பென்ஸ் குறிப்பிடுகின்றது.
நவீன அம்சங்களின் உச்சகட்டமாக பல்வேறு வசதிகளை பெற்ற மாடலாக விளங்கும். விஷன் டோக்கியோ வேன் கான்செப்ட் தானியங்கி முறையில் இயங்கும் மாடலாகும். மிக சிறப்பான இடவசதியுடன் கூடிய இல்லம் போல விளங்கும் காராக இது விளங்குகின்றது.
ஓவல் வடிவ உட்புறத்தினை கொண்டுள்ள இந்த கான்செப்ட் மாடலில் மொத்தம் 5 இருக்கைகள் உள்ளது. இதில் சிறப்பான வசதியாக முப்பரிமான வடிவில் நமக்கு தேவையான தகவலை பெறும் வகையில் ஹோலோகிராம் இருக்கும்.
மேலும் படிக்க ; மெர்சிடிஸ் F015 லக்சூரி இன் மோஷன்
ஃப்யூவல்செல் மற்றும் எலக்ட்ரிக் என இரண்டும் இணைந்த ஹைபிரிட் மாடல் காராக விளங்கும். இதன் மூலம் 980 கிமீ பயணிக்க இயலும். இதன் பேட்டரி மூலம் 190 கிமீ மற்றும் ஃப்யூவல் செல் மூலம் 790கிமீ பயணிக்க முடியும்.
Mercedes-Benz Vision Tokyo Concept Revealed at Tokyo Motor Show
Photo Gallery (படங்கள் பெரிதாக தெரிய படங்களின் மீது கிளிக் பன்னுங்க)