ரெனோ க்விட் காரின் CMF-A தளத்தில் உருவாக்கப்பட உள்ள புதிய க்ராஸ்ஓவர் ரக கான்செப்ட் மாடலாக வரவுள்ள புதிய டட்சன் மாடலின் உற்பத்தி நிலை மாடல் காட்சிக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
குறைவான விலை கொண்ட கார்களை தயாரிக்கும் நிசான் நிறுவனத்தின் டட்சன் பிராண்டில் இது இரண்டாவது கான்செப்ட் மாடலாகும். இதற்க்கு முன்பாக டட்சன் ரெடி கோ மாடலை பார்வைக்கு கொண்டு வந்தது.
டீசரில் வட்ட வடிவ பனி விளக்குகள் , முகப்பு விளக்கு மற்றும் டட்சன் பிராண்டு கிரில் காட்சி தருகின்றது. ரெனோ க்விட் தளத்தில் இந்த கான்செப்ட் கார் உருவாக்கப்படுவதனால் க்விட் காருக்கு இணையான விலையில் இந்த மாடல் இருக்கும்.
மேலும் படிக்க ; ரெனோ க்விட் கார் முழுவிபரம்
44வது டோக்கியோ மோட்டார் ஷோ வரும் அக்டோபர் 30ந் தேதி முதல் நவம்பர் 8ந் தேதி வரை டோக்கியோவில் நடைபெற உள்ளது. இதில் இந்த டட்சன் மாடல் காட்சிக்கு வரவுள்ளது.
Datsun concept car teased