செவர்லே அட்ரா கான்செப்ட் மாடலின் அடிப்படையில் புதிய காம்பேக்ட் ரக எஸ்யூவி கார் மாடலை 2018ம் ஆண்டில் விற்பனைக்கு கொண்டு வரவுள்ளது. GEM-B என்ற குறியீட்டுப் பெயரில் வடிவமைக்கப்பட உள்ளது.
![]() |
செவர்லே அட்ரா எஸ்யூவி |
ஜெனரல் மோட்டார்ஸ் செவர்லே இந்தியாவில் ரூ.6240 கோடி முதலீட்டினை அடுத்த 5 வருடங்களில் செய்ய உள்ளது. இந்த முதலீட்டின் வாயிலாக உள்நாட்டிலே 10 மாடல்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. அவற்றில் காம்பேக்ட் எஸ்யூவி காரும் ஒன்றாகும்.
க்ரெட்டா , டஸ்ட்டர் , எஸ் க்ராஸ் போன்ற மாடல்களுக்கு சவாலினை ஏற்படுத்தும் வகையில் அமையவிருக்கும் செவர்லே எஸ்யூவி 4 மீட்டருக்குள்ளான நீளத்தில் இருக்காது. சற்று கூடுதலான நீளத்தில் இந்திய பொறியாளர்களால் உருவாக்கப்பட உள்ள இந்த எஸ்யூவி காரில் பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டிலும் கிடைக்கலாம். என்ஜின் விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
![]() |
செவர்லே அட்ரா காம்பேக்ட் எஸ்யூவி |
பெங்களூருவில் உள்ள ஜிஎம் தொழில்நுட்ப கழகத்தால் உருவாக்கப்பட உள்ள புதிய காம்பேக்ட் எஸ்யூவி 2018ம் ஆண்டில் விற்பனைக்கு வரவுள்ளது.
Chevrolet upcoming compact SUV codenamed as GEM-B