5 வருட காலமாக எதிர்பார்க்கப்பட்ட மஹிந்திரா மோஜோ பைக்கின் விலை நேற்று வெளியிடப்பட்டுள்ளது. அறிமுகம் மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு சிறப்பு விலையில் மஹிந்திரா வெளியிட்டுள்ளது.
தோற்றம்
இந்திய சந்தையில் சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ள டியூக் 200 , சிபிஆர் 250 ஆர் போன்ற பைக்குகளுக்கு போட்டியாக வந்துள்ள மோஜோ மிரட்டலான கோப பார்வையை தெறிக்கும் தோற்றத்தில் தன் போட்டியாளர்களை மிரட்ட தொடங்கியுள்ளது.
மோஜோ பைக்கில் இரட்டை பிரிவு முகுப்பு விளக்கில் நேரத்தியாக கண் இமை போன்ற எல்இடி விளக்குகளை பெற்றுள்ளது. ஆனால் போட்டியாளர்கள் ஒற்றை முகப்பு விளக்குகளை பெற்றுள்ளது. எல்இடி பின்புற விளக்குகள் , இருக்கை அமைப்பு என டியூக் 200 , சிபிஆர் 250ஆர் பைக்குகளை விட தனித்து காட்சியளிக்கின்றது.
என்ஜின்
டியூக் 200 பைக்கில் 199.5 சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 25.4பிஎச்பி மற்றும் டார்க் 19.2 என்எம் ஆகும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.
சிபிஆர் 250ஆர் பைக்கில் 249.6 சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 26.15பிஎச்பி மற்றும் டார்க் 22.9 என்எம் ஆகும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.
மோஜோ 300 பைக்கில் 295 சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் ஆற்றல் 27பிஎச்பி மற்றும் டார்க் 30 என்எம் ஆகும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் பெற்றுள்ளது.
போட்டியாளர்களை விட சிறப்பான ஆற்றல் மற்றும் கூடுதல் டார்க்கினை மோஜோ பெற்றுள்ளது.
அளவுகள்
போட்டியாளர்களை விட கூடுதலாகவே அளவுகளில் மோஜோ உள்ளது. மோஜோ பைக்கின் நீளம் 2100மிமீ, அகலம் 800மிமீ உயரம் 1165.5மிமீ . இதன் வீல் பேஸ் 1465மிமீ ஆகும். மோஜோ பைக்கின் எடை 165 கிலோ ஆகும்.
சிபிஆர் 250ஆர்பைக்கின் நீளம் 2030மிமீ, அகலம் 720மிமீ மற்றும் உயரம் 1127மிமீ . இதன் வீல் பேஸ் 1367மிமீ ஆகும். சிபிஆர் 250ஆர் பைக்கின் எடை 163 கிலோ ஆகும்.
டியூக் 200 பைக்கின் நீளம் 2002மிமீ, அகலம் 720மிமீ உயரம் 1724மிமீ . இதன் வீல் பேஸ் 1367மிமீ ஆகும். மோஜோ பைக்கின் எடை 129.5 கிலோ ஆகும்.
சஸ்பென்ஷன்
மோஜோ மற்றும் டியூக் 200 பைக்கில் யூஎஸ்டி ஃபோர்க்குகள் உள்ளன. சிபிஆர் 250 ஆர் பைக்கில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் உள்ளது. பின்புறத்தில் மூன்று பைக்குகளிலும் மோனோசாக் அப்சார்பர்களை பெற்றுள்ளது.
பிரேக்
மோஜோவின் முன்புறத்தில் 320மிமீ டிஸ்க் பிரேக் பின்பக்கத்தில் 240மிமீ டிஸ்க் பிரேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏபிஎஸ் இல்லை
சிபிஆர் 250ஆர் பைக்கின் முன்புறத்தில் 296மிமீ டிஸ்க் பிரேக் பின்பக்கத்தில் 220மிமீ டிஸ்க் பிரேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏபிஎஸ் பிரேக் உள்ளது.
டியூக் 200 பைக்கில் முன்புறத்தில் 300மிமீ டிஸ்க் பிரேக் பின்பக்கத்தில் 230மிமீ டிஸ்க் பிரேக் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஏபிஎஸ் இல்லை
விலை
கேடிஎம் டியூக் 200 பைக் ரூ.1.44 லட்சம்
மஹிந்திரா மோஜோ ரூ. 1.58 லட்சம்
ஹோண்டா சிபிஆர் 250 ஆர் . ரூ.1.88லட்சம்