எர்டிகா எம்பிவி காரின் பெட்ரோல் மாடலில் சிவிடி ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்டிருக்கும். மேலும் சியாஸ் காரில் உள்ளது போல எர்டிகா டீசல் மாடலில் SHVS மினி ஹைபிரிட் அமைப்பு இருக்கும்.
முன்பக்க பம்பர் மற்றும் பின்புற பம்பர் கிரில் , புதிய அலாய் வீல் போன்றவை புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் உட்புறத்தில் ஸ்டார்ட்/ஸ்டாப் பொத்தான் , ஸ்மார்ட்பிளே இன்ஃபோடெயின்மென்ட் போன்றவை பெற்றுள்ளது.
93.7 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.3 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் டார்க் 130என்எம் ஆகும். இதில் மெனுவல் மற்றும் சிவிடி ஆட்டோமேட்டிக் ஆப்ஷனில் வரவுள்ளது.
88.8 பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 1.4 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் டார்க் 200என்எம் ஆகும். இதில் மெனுவல் ஆப்ஷனில் வரவுள்ளது.
வரும் 15ந் தேதி அதிகார்வப்பூர்வமாக புதிய மாருதி எர்டிகா விற்பனைக்கு வருகின்றது.