ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் SVR |
ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் சிறப்பு வாகன பிரிவின் உருவாகி உள்ள முதல் லேண்ட்ரோவர் மாடலான ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் எஸ்யூவி SVR பேட்ஜில் விற்பனைக்கு வந்துள்ளது.
ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் காரில் இருந்து SVR வித்தியாசத்தை கான்பிக்கும் வகையில் முன் மற்றும் பின்புற பம்பர்கள் புதிதாக உள்ளது. மேற்புறத்தில் கருப்பு நிற ஃபினிஷ் , ரியர் ஸ்பாய்லர் , புகைப்போக்கி போன்றவற்றில் மாற்றங்கள் உள்ளது. 21” அலாய் வீல் (22” அலாய் வீல் ஆப்ஷனல் ) பயன்படுத்தப்பட்டுள்ளது. உட்புறத்தில் மிக சொகுசான ஸ்போர்ட்டிவ் இருக்கை ,4 விதமான இன்டிரியர் வண்ணங்கள் போன்றவற்றை பெற்றுள்ளது.
542பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் மிகவும் சக்திவாய்ந்த 5.0 லிட்டர் வி8 சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 680என்எம் ஆகும். இதில் 8 வேக தானியங்கி கியர்பாக்ஸ் பயன்படுத்தப்பட்டுள்ளது.
0 முதல் 100கிமீ வேகத்தினை எட்டுவதற்க்கு 4.5 விநாடிகள் எடுத்துக்கொள்ளும். ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் SVR எஸ்யூவி காரின் உச்சகட்ட வேகம் மணிக்கு 260கிமீ ஆகும்.
எப்பொழுது இயங்கும் ஆல்வில் டிரைவ் ஆப்ஷனுடன் விளங்கும் 213மிமீ கிரவுன்ட் கிளியரன்ஸ் மற்றும் 850மிமீ உயரமுள்ள நீரிலும் சிறப்பாக பயணிக்கும் வகையில் ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் SVR காரில் சிறப்பான ஆன்ரோடு மற்றும் ஆஃப்ரோடு அனுபவத்தினை வழங்கும் வகையில் நவின அம்சங்களை பெற்றுள்ளது.
ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் SVR கார் இந்தியாவில் முழுதும் வடிவமைக்கப்பட்ட மாடலாக விற்பனைக்கு வந்துள்ளது. இதன் போட்டியாளர்கள் மெர்சிடிஸ் ஏஎம்ஜி GLE63 மற்றும் போர்ஷே கேயேன் டர்போ S.
ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் SVR கார் விலை ரூ.2.12 கோடி ( எக்ஸ்ஷோரூம் )
ரேஞ்ச்ரோவர் ஸ்போர்ட் SVR |
Range Rover Sport SVR Launched In India