நிசான் டட்சன் கோ மற்றும் கோ ப்ளஸ் கூடுதல் வசதிகள் மற்றும் புதிய வேரியண்ட்டை சேர்த்து பண்டிகை காலத்தை முன்னிட்டு சிறப்பு சலுகைகளை டட்சன் நிறுவனம் வழங்கியுள்ளது.
![]() |
கோ ப்ளஸ் |
கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களுக்கு முதல் வருடத்திற்க்கு இலவச வாகன காப்பீடு , கோ காருக்கு ரூ.25,000 வரை சலுகை , கோ ப்ளஸ் எம்பிவி காருக்கு ரூ.22,000 வரை சலுகை மற்றும் 8.99 சதவீத வட்டி விகிதத்தை போன்ற சிறப்பு சலுகைகள் வரும் 31 அக்டோபர் 2015 வரை மட்டுமே.
கோ மற்றும் கோ ப்ளஸ் கார்களில் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. புதிய எலக்ட்ரிக் பவர் ஸ்டீயரிங் இணைக்கப்பட்டுள்ளது. புதிதாக A வேரியண்ட் இணைக்கப்பட்டுள்ளது.
நிசான் கார்களுக்கும் முதல் வருட வாகன காப்பீடு இலவசம் மற்றும் புதிய ஆடியோ அமைப்பு போன்றவற்றை மைக்ரா , சன்னி மற்றும் டெரானோ கார்களுக்கு சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
டட்சன் கோ கார் விலை பட்டியல்
- கோ D : ரூ. 3,22,746
- கோ A : ரூ. 3,48,705
- கோ A EPS : ரூ. 3,63,681
- கோ T : ரூ. 3,83,650
- கோ NXT : ரூ. 3,88,641
- கோ T (O) : ரூ. 4,03,618
டட்சன் கோ ப்ளஸ் கார் விலை பட்டியல்
- கோ ப்ளஸ் D : ரூ. 3,78,711
- கோ ப்ளஸ் A : ரூ. 3,98,679
- கோ ப்ளஸ் A EPS : ரூ. 4,24,638
- கோ ப்ளஸ் T : ரூ. 4,55,589
- கோ ப்ளஸ் T (O) : ரூ. 4,75,557
( அனைத்தும் சென்னை எக்ஸ்ஷோரூம் விலை )
Datsun Go and GO+ Get New Prices and Features