மணிக்கு 201 கிமீ வேகத்தில் பயணிக்கு திறன் பெற செக்வே அபேக்ஸ் எலெக்ட்ரிக் பைக் மாடல் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வரும் 2020 ஆட்டோ எக்ஸ்போ அரங்கில் பங்கேற்க உள்ள செக்வே நிறுவனம் அபேக்ஸ் மாடலையும் காட்சிப்படுத்த வாய்ப்புள்ளது.
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு செயல்படும் செக்வே-நைன்பாட் நிறவனம், பல்வேறு எலெக்ட்ரிக் டூ வீலர் ஸ்கூட்டர் கான்செப்ட் உட்பட அபேக்ஸ் பேட்டரி மோட்டார்சைக்கிள் மாடலும் ஜனவரி 7 ஆம் தேதி நடைபெற உள்ள நுகர்வோர் மின்னணு கண்காட்சியில் வெளியிடப்பட உள்ளது. இதனை தொடர்ந்து பிப்ரவரி 7 ஆம் தேதி நடைபெற உள்ள 2020 ஆட்டோ எக்ஸ்போ அரங்கிலும் இந்நிறுவனம் பங்கேற்க உள்ளதால் இந்த பைக் உட்பட சில எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை காட்சிப்படுத்த வாய்ப்புள்ளது.
அதிகபட்ச வேகம் மணிக்கு 201 கிமீ பெற இயலும். மேலும், வெறும் 2.9 வினாடிகளில் 0-100 கிமீ வேகத்தை பெற இயலும். இந்த பைக் உற்பத்தியை நெருங்குவதால் பேட்டரி மற்றும் மோட்டார் விபரங்கள் வெளிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் செக்வே அபேக்ஸ் விற்பனைக்கு வெளியிடுவது குறித்து உறுதியான தகவலும் இல்லை.