வரும் அக்டோபர் 16ந் தேதி மஹிந்திரா மோஜோ பைக் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மோஜோ ஸ்போர்ட்ஸ் பைக் விலை ரூ.1.70 லட்சம் முதல் 1.90 லட்சத்திற்க்குள் இருக்கலாம்.
மஹிந்திரா மோஜோ பைக் |
நேக்டு பைக் பிரிவில் வரவுள்ள மோஜோ பைக்கிற்க்கு முன்பதிவு நடந்து வருகின்றது. ரூ.10,000 கட்டணமாக செலுத்தி மோஜோ பைக்கிற்க்கு முன்பதிவு செய்யலாம்.
இரட்டை பிரவு கொண்ட வட்ட வடிவ முகப்பு விளக்குகளுன் பகல் நேர ரன்னிங் எல்இடி புருவங்களை பெற்றுள்ளது. 27பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் 300சிசி பெட்ரோல் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 25என்எம் ஆகும். இதில் 6 வேக கியர்பாக்ஸ் பயன்படுத்தியுள்ளனர்.
5 வருடங்களாக சோதனை ஓட்டத்தில் இருந்த மஹிந்திரா மோஜோ வரும் அக்டோபர் 16 ந் தேதி வரவுள்ளது. கேடிஎம் டியூக் 390 , பெனெல்லி டிஎன்டி300 , கவாஸாகி Z250 போன்ற பைக்குகளுடன் மோஜோ போட்டியை சந்திக்கும்.
மேலும் படிக்க ; மஹிந்திரா மோஜோ விபரம்
மஹிந்திரா மோஜோ ஸ்போர்டிவ் பைக் விலை ரூ.1.70 லட்சம் முதல் 1.90 லட்சத்திற்க்குள் இருக்கும்.