யமஹா ஆர்15 எஸ் பைக் |
யமஹா ஆர்15 வெர்சன் 2.0 பைக் போல தனிதனியான இருக்கைகள் இல்லாமல் ஒற்றை இருக்கையாக ஆர்15 எஸ் பைக்கில் இருக்கும். என்ஜினில் எவ்விதமான மாற்றங்களும் இல்லை.
யமஹா R15 S பைக்கில் ஒற்றை இருக்கை அமைப்பு, புதிய பாடி கிராஃபிக்ஸ் , புதிய டெயில் பீஸ் என மொத்த நீளம் 25மிமீ கூடியுள்ளது. வீல்பேஸ் 55மிமீ குறைந்துள்ளது. மேலும் செடில் உயரம் 10மிமீ குறைக்கப்பட்டுள்ளது , பைக்கின் கேர்ப் எடை 5 கிலோ வரை குறைந்துள்ளது.
ஃபுல் பேரிங் செய்யப்பட்ட அசத்தலான ஸ்போர்டிவ் ஆர் 15 எஸ் பைக்கில் 17பிஎஸ் ஆற்றலை வெளிப்படுத்தும் 150சிசி என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதன் டார்க் 15என்எம் ஆகும் . இதில் 6 வேக கியர்பாக்ஸ் உள்ளது.
யமஹா ஆர்15 எஸ் பைக் கலர் |
வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கேற்பதான் இந்த புதிய ஒற்றை இருக்கை கொண்ட ஆர்15 எஸ் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இதன் மூலம் இன்னும் சிறப்பான பயண அனுபவத்தினை பெற இயலும். மேலும் ஆர்15 வெர்சன் 2.0 பைக் வழக்கம்போல விற்பனையில் இருக்கும்.
ஆர்15 எஸ் மூன்று வண்ணங்களில் கிடைக்கும். அவை வெள்ளை , சிவப்பு மற்றும் பச்சை ஆகும்.
150சிசி பைக் சந்தையில் மிக சிறப்பான ஸ்போர்ட்டிவ் பைக்காக விளங்கும் ஆர் 15 V2.0 மாடலின் யமஹா ஆர் 15 எஸ் விலை ரூ.1.14 லட்சம் (டெல்லி எக்ஸ்ஷோரூம்)