மஹிந்திரா டியூவி300 |
வரவிருக்கும் மஹிந்திரா TUV300 எஸ்யூவி ரூ.7 லட்சம் விலையில் தொடங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. டியூவி300 எஸ்யூவி காருக்கு ரூ.20,000 செலுத்தி முன்பதிவு செய்து கொள்ளலாம்.
சமீபத்தில் வெளிவந்த ஸ்பை படங்கள் மூலம் மஹிந்திரா டியூவி300 மிக சிறப்பான எஸ்யூவி தோற்றத்தினை பெற்றுள்ளதை அறிவோம். முகப்பில் சரிவான கோண வடிவில் காட்சியளிக்கும் டியூவி300 காரில் மஹிந்திராவின் பாரம்பரிய கோடுகள் கொண்ட கிரில் புதுப்பிக்கப்பட்டுள்ளது.
உட்புறத்திலும் இரட்டை வண்ண டேஸ்போர்டு , ஸ்டீயரிங் வீலில் ஆடியோ கன்ட்ரோல் பொத்தான்கள் , டாப் வேரியண்டில் தொடுதிரை அமைப்பு , ஸ்மார்ட் போன் தொடர்பு போன்றவற்றை பெற்றிருக்கும்.
புதிய தலைமுறை எம் ஹாக்80 1.5 லிட்டர் டீசல் என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதன் ஆற்றல் 80எச்பி மற்றும் முறுக்குவிசை 230என்எம் இருக்கும். மேலும் 5 வேக மெனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் மெனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனிலும் வரவுள்ளது.
மேலும் ஸ்கார்ப்பியோ காரில் உள்ளது போல மைக்ரோ ஹைபிரிட் அம்சத்தை பெற்றிருக்கும். இதன் மூலம் டிராஃபிக் சிகனல்களில் நிற்க்கும்பொழுது தானாகவே வாகனம் அணைந்துவிடும். கிளட்சில் கால் வைத்தால் தானாகவே இயங்க தொடங்கும். மேலும் ஏசி பயன்பாட்டின் பொழுதும் சிறப்பான மைலேஜ் தரும் வகையில் ஈக்கோ மோட் ஆப்ஷனுடன் வரலாம். இதனால் டியூவி300 சிறப்பான எரிபொருள் சிக்கனத்தை தரும்.
மேலும் படிக்க ; மஹிந்திரா TUV300 வேரியண்ட் விபரம்
மஹிந்திரா டியூவி300 எஸ்யூவி காரின் விளம்பர தூதுவராக பாகுபலி நாயகன் பிரபாஸ் ஒப்பந்தமாகியுள்ளார். டியூவி300 விலை ரூ.7 முதல் 11.50 லட்சத்திற்க்குள் இருக்கலாம்.
Mahindra TUV300 SUV Engine details