![]() |
டெஸ்லா மோட்டார்ஸ் |
டெஸ்லா நிறுவனம் மிக சிறப்பான எலக்ட்ரிக் கார் மாடல்களை விற்பனை செய்து வரும் நிறுவனமாகும் . டெஸ்லா நிறுவனத்தின் சிஇஓ எலோன் மஸ்க் சமீபத்தில் வெளியிட்டுள்ள ட்வீட்களில் மாடல் 3 கார் பற்றிய முக்கிய விவரங்களை வெளியிட்டுள்ளார்.
தெஸ்லா நிறுவனம் மாடல் 3 என்ற பெயரில் உருவாக்கி வரும் புதிய செடான் காரினை வரும் மார்ச் 2016யில் பார்வைக்கு கொண்டு வரவுள்ளது. அதனை தொடர்ந்து முன்பதிவு தொடங்கப்பட உள்ளதாம். முன்பதிவு தொடங்கினாலும் மாடல் 3 கார் டெலிவரி வரும் 2017ம் ஆண்டில் தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாடல் 3 எலக்ட்ரிக் காரின் விலை ரூ.23 லட்சத்தில் வரவுள்ளதாம். இந்த மாடல் முழுதாக கட்டமைக்கப்பட்டு இறக்குமதி செய்வதனால் விலை இரண்டு மடங்கு என்பதனால் இந்தியாவிலே புதிய ஆலையை கட்டமைத்து பாகங்களை தருவித்து ஒரங்கினைக்க வாய்ப்புகள் உள்ளதாம்.
டெஸ்லா மாடல் 3 காரின் போட்டியாளர்கள் பென்ஸ் ஏ கிளாஸ் , ஆடி ஏ4 மற்றும் பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் ஆகும்.
Tesla Model 3 to be revealed in March 2016