![]() |
மஹிந்திரா டியூவி300 எஸ்யூவி |
பாக்ஸ் டைப் வடிவம் கொண்ட தொடக்க நிலை டியூவி 300 எஸ்யூவி கார் மிக சிறப்பான வரவேற்பினை வளரும் நகரங்கள் மற்றும் ஊரக பகுதிஇல் பெறலாம் என தெரிகின்றது.
சரிவகமான கோணத்தில் மஹிந்திராவின் பாரம்பரிய கிரில் இடம் பெற்றுள்ளது. சிறப்பான முகப்பினை பெற்றுள்ள டியூவி300 காரின் சதுர வடிவ பனி விளக்கு அறையை சுற்றி குரோம் பூச்சினை பெற்றுள்ளது. பின்புறத்தில் குவான்ட்டோ தோற்றத்தினை கொண்டுள்ளது. உட்புறத்தில் பெரும்பாலான பாகங்கள் ஸ்கார்ப்பியோ மற்றும் எக்ஸ்யூவி500 மாடல்களில் இருந்து பெற்றுள்ளது.
T4 , T6 மற்றும் T8 என மூன்று விதமான வேரியண்டில் கிடைக்கும். இவற்றில் ஏசி , பவர் ஸ்டீயரிங் , பவர் வின்டோஸ் போன்றவை அனைத்திலும் இருக்கும்.
மஹிந்திரா டியூவி300 T4 வேரியண்டில்
- மூன்று விதமான வண்ணங்கள் (சில்வர் , கருப்பு , சிவப்பு )
- ஏபிஎஸ் மற்றும் காற்றுப்பைகள் ஆப்ஷனல் மாடலில் கிடைக்கும்.
மஹிந்திரா டியூவி300 T6 வேரியண்டில்
- மூன்று விதமான வண்ணங்கள் ( வெள்ளை , சில்வர் , கருப்பு)
- ஏபிஎஸ் மற்றும் காற்றுப்பைகள்
- பாடி வண்ண பம்பர் , கைப்பிடிகள் , விங் மிரர்
- ஆட்டோமெட்டிக் மெனுவல் கியர்பாக்ஸ் (ஆப்ஷனல்)
- 6 விதமான வண்ணங்கள் ( சில்வர் , கருப்பு, சிவப்பு , வெள்ளை, நீலம் மற்றும் ஆரஞ்சு )
- ஏபிஎஸ் மற்றும் காற்றுப்பைகள்
- ஆட்டோமெட்டிக் மெனுவல் கியர்பாக்ஸ் (ஆப்ஷனல்)
மஹிந்திரா டியூவி300 எஸ்யூவி விலை ரூ.7.50 லட்சத்தில் தொடங்கலாம். தற்பொழுது முன்பதிவு நடந்து வருகின்றது.
Mahindra TUV300 variants details