![]() |
லம்போர்கினி அவென்டேடார் சூப்பர்வெலாஸ் ரோட்ஸ்டெர் |
அவென்டேடார் சூப்பர்வெலாஸ் ரோட்ஸ்டெர் காரின் சிறப்பு பதிப்பில் மொத்தம் 500 கார்களை மட்டுமே விற்பனை செய்ய உள்ளனர். இந்த கூரை இல்லாத அவென்டேடார் எஸ்வி ரோட்ஸ்டெர் சிறப்பான வரவேற்பினை பெற்றுள்ளது.
அவென்டேடார் சூப்பர்வெலாஸ் காரின் கூரை இல்லாத ரோட்ஸ்டெர் மாடலில் 739 எச்பி ஆற்றலை வெளிப்படுத்தும் மிகவும் சக்திவாய்ந்த 6.5 லிட்டர் வி12 என்ஜின் பொருத்தப்பட்டிருக்கும். இதில் 7 வேக ஆட்டோமேட்டிக் மெனுவல் டிரான்ஸ்மிஷன் உள்ளது.
0 முதல் 100 கிமீ வேகத்தை எட்டுவதற்க்கு 2.9 விநாடிகள் எடுத்துக்கொள்ளும். அவென்டேடார் சூப்பர்வெலாஸ் ரோட்ஸ்டெர் காரின் உச்சகட்ட வேகம் மணிக்கு 350கிமீ ஆகும்.
மேற்கூரை கார்பன் ஃபைபர் கொண்டு வெறும் 6 கிலோ எடையில் வடிவமைத்துள்ளனர். இதனை தேவைப்படும் பொழுது பயன்படுத்தி கொள்ளலாம்.
Lamborghini Aventador SuperVeloce Roadster Revealed