ஹோண்டா சிபி டிரிக்கர் பைக்கின் விற்பனையை முடிவுக்கு கொண்டு வர ஹோண்டா திட்டமிட்டுள்ளது. புதிய ஹார்னட் 160R பைக்கிற்க்கு வருகைக்கு பின் சிபி டிரிக்கர் உற்பத்தி நிறுத்தப்படலாம்.
பெரிதாக வரவேற்பினை பெற தவறிய பிரிமியம் ரக ஹோண்டா சிபி டிரிக்கர் பைக்கில் 150சிசி என்ஜின் பொருத்தபட்டுள்ளது. சிபி டேஸ்லர் பைக்கிற்க்கு மாற்றாக சிபி டிரிக்கர் வந்தது.
வரவிருக்கும் புதிய ஹார்னட் 160R பைக் சிபி யூனிகார்ன் 160 பைக்கிற்க்கு மேலாக நிலைநிறுத்தப்பட உள்ளதால் அதற்க்கு கீழாக மற்றும் விற்பனை குறைவாக உள்ள மாடலான டிரிக்கரை நிறுத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகின்றது.
மேலும் படிக்க ; ஹோண்டா சிபி ஹார்னட் 160ஆர் பைக் விபரம்
இந்தியாவில் படிப்படியாக விற்பனை குறைக்கப்பட்டாலும் ஏற்றுமதி சந்தையில் டிரிக்கர் விற்பனை செய்யப்பட உள்ளது.
Honda discontinues CB Trigger in India