ஹோண்டா சிபி ஹார்னட் 160R |
சிபி யூனிகார்ன் 160 பைக்கிற்க்கு மேலாக நிலை நிறுத்தப்பட உள்ள புதிய ஹோண்டா சிபி ஹார்னட் 160R பைக்கில் யூனிகார்ன் என்ஜினே பொருத்தப்பட்டிருக்கும்.
250சிசி முதல் 900சிசி வரை உள்ள பைக் மாடல்களுக்கு மட்டுமே ஹார்னட் பிராண்ட் பெயரை ஹோண்டா பயன்படுத்தி வந்தது.
ஹார்னட் 160ஆர் பைக்கில் 14.5 பிஎச்பி ஆற்றலை தரவல்ல 162.71சிசி என்ஜின் பொருத்தப்பட்டிருகும். இதன் முறுக்குவிசை 14.61என்எம் ஆகும்.
ஸ்போர்ட்டிவ் தோற்றத்தில் விளங்கும் சிபி ஹார்னட் 160R பைக்கில் முன் மற்றும் பின்பக்கங்களில் டிஸ்க் பிரேக் ஆப்ஷன் உள்ளது.
இரட்டை வண்ணங்களில் காட்சி படுத்தப்பட்டுள்ள ஹார்னட் 160ஆர் ஒற்றை வண்ணத்திலும் கிடைக்கலாம்.
முன்பக்கத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க்குகள் பின்புறத்தில் மோனோஸ்பிரிங் சாக் அப்சார்களை பெற்றுள்ளது.
சிபி யூனிகார்னை 160 பைக்கை விட ரூ 4000 முதல் 5000 வரை விலை கூடுதலாக இருக்கலாம்.
யமஹா FZ-S வெர்சன் 2.0 , ஹீரோ எக்ஸ்டீரிம் ஸ்போர்ட்ஸ் , டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160 , மற்றும் சூசுகி ஜிக்ஸெர் போன்ற பைக்குகளுக்கு புதிய ஹோண்டா சிபி ஹார்னட் 160R போட்டியாக விளங்கும்.
விலை மற்றும் வருகை
புதிய ஹோண்டா சிபி ஹார்னட் 160R பைக் விலை ரூ.85,000 இருக்கலாம் மேலும் வரும் தீபாவளி பண்டிகையின் பொழுது விற்பனைக்கு வரலாம் என தெரிகின்றது.
New Honda CB Hornet 160R Unveiled