பிஎஸ்6 என்ஜினை பெற்ற மேம்பட்ட புதிய யமஹா ஆர்15 பைக் மாடலை ரூபாய் 1 லட்சத்து 45 ஆயிரம் (எக்ஸ்ஷோரூம்) ஆரம்ப விலையில் இந்தியா யமஹா மோட்டார் நிறுவனம் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. முன்பாக விற்பனையில் கிடைத்து வந்த மாடலை விட ரூ.3,000 வரை விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
2020 ஆர் 15 இப்போது பிஎஸ் 6 மாசு உம்ழ்வுக்கு இணக்கமாக அமைந்துள்ளது. ஆனால், பிஎஸ்4 மாடலை விட பவர் குறைக்கப்பட்டுள்ளது. பிஎஸ் 4 மாடலில் 19 பிஹெச்பியுடன் டார்க் 14.7 என்எம் உடன் ஒப்பிடும்போது, 2020 யமஹா YZF-R15 பிஎஸ்6 மாடல் இப்போது 10,000 ஆர்.பி.எம்-ல் 18.3 பிஹெச்பி பவரையும், டார்க் 14.1Nm ஆக குறைந்துள்ளது. ஆறு வேக கியர்பாக்ஸுடன் என்ஜின் தொடர்ந்து இணைக்கப்பட்டுள்ளது.
புதிய ஆர் 15 மாடலின் பின்புறத்தில் ரேடியல் டயர், சைட்-ஸ்டாண்ட் என்ஜின் கட் ஆஃப் சுவிட்ச் மற்றும் டூயல் ஹார்ன் ஆகியவற்றைக் கொண்டுள்ளது. இந்த பைக் மூன்று விதமான புதிய நிறங்களில் விற்பனை செய்யப்பட உள்ளது. ரேசிங் ப்ளூ மற்றும் தண்டர் கிரே நிறங்களின் விலை ரூ .1.45 லட்சம் மற்றும் டார்க் நைட் நிறத்தின் விலை ரூ .1.47 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.