யமஹா ஆல்ஃபா ஸ்கூட்டரில் இரட்டை வண்ண கலவையிலான ஸ்கூட்டர் விற்பனைக்கு வந்துள்ளது. யமஹா ஆல்ஃபா ஸ்கூட்டரில் புதிய வண்ணங்கள் மட்டும் இணைக்கப்பட்டுள்ளன.
ஸ்கூட்டர் சந்தையில் வலுவான ஆதிக்கத்தை செலுத்த தொடங்கியுள்ள யமஹா மிக சிறப்பான வளச்சி அடைந்து வருகின்றது. ரே , ரே இசட் , ஆல்ஃபா , ஃபேசினோ போன்ற மாடல்களை யமஹா விற்பனை செய்கின்றது.
கடந்த மார்ச் மாதம் புதிய வண்ணம் மற்றும் பூளூ கோர் நுட்பத்துடன் விற்பனைக்கு வந்த ஆல்ஃபா தற்பொழுது மேலும் இரண்டு வண்ணங்களுடன் மொத்தம் 8 விதமான வண்ணங்களில் ஆல்ஃபா கிடைக்கும்.
7 பிஎச்பி ஆற்றலை தரவல்ல 113சிசி ஒற்றை சிலிண்டர் என்ஜின் பயன்படுத்தப்பட்டுள்ளது. யமஹா ஆல்ஃபா ஸ்கூட்டரின் மைலேஜ் லிட்டருக்கு 66கிமீ ஆகும்.
ராக்கிங் ரெட் மற்றும் பீமிங் பூளூ என இரண்டு டியூவல் வண்ணங்கள் சேர்க்கப்பட்டுள்ளது. தற்பொழுது மூன்று இரட்டை வண்ணங்களுடன் 8 நிறங்களை கொண்டுள்ளது.
சாதரன நிறத்தை விட இரட்டை வண்ணங்களின் விலை ரூ.1000 கூடுதலாகும்.
யமஹா ஆல்ஃபா ஸ்கூட்டர் விலை
யமஹா ஆல்ஃபா டியூவல் டோன் ; ரூ.49,939
யமஹா ஆல்ஃபா சிங்கிள் டோன் ; ரூ. 48,936
(ex-showroom Delhi)
Yamaha Alpha gets Two New Dual Tone