மஹிந்திரா ஸ்கார்ப்பியோ எஸ்யுவி காரின் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் மாடல் விற்பனைக்கு வந்துள்ளது. ஸ்கார்ப்பியோ எஸ்யுவி 2WD மற்றும் 4WD என இரண்டு டிரைவ் ஆப்ஷனிலும் கிடைக்கும்.
ஸ்கார்ப்பியோ ஆட்டோமேட்டிக் |
டாப் வேரியண்டான எஸ10யில் வந்துள்ள 6 வேக தானியங்கி டிரான்ஸ்மிஷன் 120பிஎச்பி ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 2.2 லிட்டர் எம் ஹாக் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது.
ஸ்கார்ப்பியோ காரில் 4 வில் டிரைவ் மற்றும் 2 வீல் டிரைவ் இரண்டிலும் ஆட்டோமேட்டிக் கிடைக்கின்றது. இரண்டு காற்றுப்பைகள் ,ஏபிஎஸ் இபிடி , ஸ்பீட் அலர்ட் போன்ற வசதிகள் உள்ளன.
இந்திய வாடிக்கையாளர்கள் மனதில் மிக அழுத்தமாக பதிந்த மாடல்களில் ஸ்கார்ப்பியோ எஸ்யுவி காருக்கு என்று தனி இடம் என்றுமே இருக்கும்.
ஸ்கார்ப்பியோ ஆட்டோமேட்டிக் விலை விபரம் (ex-showroom Chennai)
ஸ்கார்ப்பியோ S10 4WD — ரூ.14.47 லட்சம்
ஸ்கார்ப்பியோ S10 2WD — ரூ.13.24 லட்சம்
Mahindra Scorpio SUV gets Automatic Transmission