பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலான சேட்டக் ஜன்வரி முதல் விற்பனைக்கு கிடைக்க உள்ள நிலையில், இந்நிறுவனத்தின் அடுத்த அதிக சக்தி மற்றும் ரேஞ்சு பெற்ற மின்சார மாடலை கேடிஎம் அல்லது ஹஸ்குவர்ணா பிராண்டில் உற்பத்தி செய்ய உள்ளதாக பஜாஜ் ஆட்டோ அறிவித்துள்ளது.
நேற்றைக்கு நடைபெற்ற பஜாஜ் சேட்டக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் எலெக்ட்ரிக் யாத்ரா நிறைவு நிகழ்ச்சியில் பேசிய ராஜீவ் பஜாஜ் அடுத்த மின்சார தயாரிப்பு குறித்த கூடுதல் விவரங்களை குறிப்பிட்டுள்ளார். இந்த பைக் தயாரிப்பாளரின் சேட்டக்கின் புதிய சக்திவாய்ந்த பதிப்பினை தயாரிக்க உள்ளதாக குறிப்பிட்டுள்ளார். இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டர் இந்திய சந்தையில் கேடிஎம் / ஹஸ்குவர்ணா பிராண்டின் கீழ் விற்பனை செய்யப்படும்.
இந்த புதிய மாடல் ஆரம்ப கட்ட நிலையில் உள்ளதாகும், இந்த பிரீமியம் பைக் பிராண்டின் பெயரில் வரவுள்ளதால் மிகவும் நவீனத்துவமான வடிவமைப்பினை கொண்டு ஸ்டைலிஷான தோற்றப் பொலிவு சிறப்பான பவர் மற்றும் ரேஞ்சுடன் அமைந்திருக்கும்.
அடுத்த ஆண்டின் தொடக்க மாதங்களில் ரூ.1.30 லட்சத்தில் பஜாஜ் சேட்டக் விற்பனைக்கு கிடைக்க உள்ள நிலையில் சக்திவாய்ந்த மாடல்கள் 2021 ஆம் ஆண்டின் மத்தியில் எதிர்பார்க்கலாம்.